For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விருதுநகரில் பயங்கரம்.. லேட்டாக வந்ததைத் தட்டிக் கேட்ட ஆசிரியரைக் கத்தியால் குத்திய மாணவர்

Google Oneindia Tamil News

Viruthunagar
விருதுநகர்: விருதுநகரில் மிகவும் பாரம்பரியமான கே.வி.எஸ் பள்ளியில் வகுப்புக்கு லேட்டாக வந்ததைத் தட்டிக் கேட்ட ஆசிரியரை கத்தியால் குத்தி விட்டான் மாணவன். கவலைக்கிடமான நிலையில் ஆசிரியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

விருதுநகரைச் சேர்ந்த கே.வி.எஸ். பள்ளிக்கூடம். மிகவும் பாரம்பரியமான, பழமையான பள்ளியாகும். தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியைச் சந்தித்து வரும் பள்ளியுமாகும்.

இப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர் அஜீத் குமார். இன்று ஆசிரியர் பாண்டியராஜன் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அஜீத் குமார் வகுப்புக்குத் தாமதமாக வந்துள்ளான். இதையடுத்து ஆசிரியர் கண்டித்து மாணவனை உள்ளே அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில், வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பாண்டியராஜனை திடீரென தனது பையில் மறைத்துக் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து குத்தி விட்டான்.

இதில் அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சக மாணவர்களின் உதவியுடன் அஜீத் குமார் பிடிக்கப்பட்டான். போலீஸார் விரைந்து வந்து ஆசிரியரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

ஆசிரியர் பாண்டியராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியை கண்டி்தததால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தான். இதே பாணியில் இன்று விருதுநகரில் நடந்துள்ள சம்பவத்தால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
A teacher was stabbed by student in Viruthunagar school for scolding him for coming late to the class.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X