For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெசோ தீர்மானங்களை ஐ.நா.சபையில் சமர்பிக்க செல்லும் மு.க.ஸ்டாலின்-கி.வீரமணி வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: டெசோ தீர்மானங்களை ஐ.நா. சபையில் சமர்ப்பிக்க செல்லும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு தி.க.தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கை தமிழர் நலனை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் சென்னையில் திமுக சார்பில் நடந்த டெசோ மாநாடு நடைபெற்றது. இதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் புறப்பட்டு செல்ல உள்ளனர்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, டெசோ மாநாட்டு தீர்மானங்கள் குறித்த வரைவு மனுவிற்கு கருணாநிதியிடம் ஒப்புதல் பெற்றனர்.

நாளை மாலை இருவரும் அமெரிக்கா செல்ல உள்ளனர். ஐ.நா சபையில் டெசோ சார்பில் மனு அளித்து விட்டு நாடு திரும்பும் வழியில் 6.11.2012 அன்று லண்டனில் பிரிட்டன் தமிழர் பேரவை சார்பில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டிலும் திமுக சார்பில் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் ஐ.நா.சபைக்கு செல்லும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

English summary
Dravida Kazhagam leader K.Veeramani wished DMK leader M.K.Stalin for his UNO trip on tommorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X