For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பான் விமான நிலையத்தில் 2-ம் உலகப் போரில் வெடிக்காத அணுகுண்டு

By Mathi
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானின் சென்டாய் விமான நிலையத்தில் 2-ம் உலகப் போரில் வெடிக்காத அதிசக்தி வாய்ந்த அணு குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பீதி ஏற்பட்டது.

ஜப்பானின் வடகிழக்கில் உள்ள சென்டாய் நகரில் டாக்ஸிகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது அணு குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவல் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்டாய் விமான நிலையம் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 92 விமான சேவைகள் ரத்தாயின.

250 கிலோ அணு குண்டு

இதைத் தொடர்ந்து அந்த அணு குண்டை பாதுகாப்பாக அகற்றும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டன. 2-ம் உலகப் போரில் ஜப்பானை அணு குண்டு மூலம் நிர்மூலமாக்கியது அமெரிக்கா. அத்தகைய அணு குண்டுகளில் ஒன்றுதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது. இந்த அணு குண்டின் எடை 250 கிலோ.

சென்டாயின் பின்னணி

2-ம் உலகப் போரின் போது சென்டாய் விமான நிலையம் ஜப்பானின் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் இந்த விமான நிலையம் தற்காலிகமாக சில மாதங்கள் மூடப்பட்டிருந்தது.

English summary
A major airport in northern Japan was closed after an unexploded bomb believed to be from WWII was found near a runway during construction work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X