For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரைகுறை பிரிவான சிறப்பு காவல் இளைஞர் படை திட்டம் வேண்டாம்: ராமதாஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: தமிழக காவல் துறையினருக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை என்ற புதிய பிரிவை ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக சட்டப்பேரவையில் வழக்கம் போல அவை விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக காவல்துறையினருக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர்படை என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்.

கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் இந்த ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்டது போல, இந்த ஆட்சியில் நியமனம் செய்யப்படும் இளைஞர் படையினர், ஆட்சி மாற்றம் ஏற்படும் போது நீக்கப்படும் ஆபத்து உள்ளது.

எனவே தமிழக காவல் துறையில் இளைஞர்படை என்ற பெயரில் அரைகுறை பிரிவை ஏற்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக தமிழக காவல்துறையில் தற்போதுள்ள காலியிடங்கள் மற்றும் அடுத்த ஓராண்டில் ஏற்பட கூடிய காலியிடங்களை கணக்கிட்டு அவற்றை நிரப்ப முழு அளவிலான காவலர்களை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu CM Jayalalitha has introduced a special youth brigade to assist the police in various activities. But PMK leader Ramadoss said that, The youth brigade will be changed when the ruling party change. So TN government should cancel the plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X