For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிமாச்சலப் பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு!

By Mathi
Google Oneindia Tamil News

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் 2007-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் சட்டசபைக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

Himachal Pradesh set for Sunday polls
ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கிறது. காங்கிரஸுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். பாஜகவின் மூத்த தலைவர்களும் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்தனர்.

இமாச்சலபிரதேசத்தில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் களத்தில் மொத்தம் 459 பேர் உள்ளனர். இவர்களில் 27 பேர் பெண்கள். வாக்களிக்க 7253 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலில் பாஜக 41 தொகுதிகளையும் காங்கிரஸ் 23 தொகுதிகளையும் பெற்றிருந்தது.

ஹிமாச்சலைப் பொறுத்தவரையில் டீசல் தான் பிரதான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் டீசல் விலை உயர்வு காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கக் கூடும். இதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாட்டு விவகாரமும் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும். இருப்பினும் ஊழல் விவகாரம் இரண்டு கட்சிகளுக்கும் பாதகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Battle lines have been drawn for Sunday's poll for the 68-member Himachal Assembly in the north Indian state where political heavyweights Prem Kumar Dhumal and Virbhadra Singh are jostling for attention of voters for whom the issue of price rise and corruption seems to have surpassed the anti-incumbency factor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X