தமிழகத்தில் பதிவாகி இருப்பது கொலை வழக்கு அல்ல- சட்டவிரோத கூட்டம் தொடர்பானதே: டக்ளஸ் தேவானந்தா
கொழும்பு: தமிழ்நாட்டில் தம் மீது பதிவாகி இருப்பது கொலை வழக்கு அல்ல என்றும் "சேரிப்புறம் ஒன்றில் சட்டவிரோதமாக கூடியது" தொடர்பான வழக்குதான் என்றும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
டக்ளஸ் செய்த கொலை!
1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னையில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா, திருநாவுக்கரசு என்ற இளைஞரை சுட்டுக் கொன்றார். இந்த வழக்கில் டக்ளஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்து இலங்கைக்குப் போனார்.
தேடப்படும் குற்றவாளி
மேலும் திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 1994-ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்ப்போது இலங்கை அமைச்சராக இருக்கும் டக்ளஸ், தம்மீதான பிடிவாராண்ட்டை ரத்து செய்ய கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது அண்மையில் பதிலளித்த தமிழக அரசு, டக்ளஸ் விசாரணைக்கு ஆஜராகியே தீர வேண்டும் என்றும் அவருக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்யக் கூடாது என்று கூறியிருந்தது.
கொலை வழக்கே இல்லையாம்!
இந்த நிலையில் இலங்கையில் இருந்து வெளியாகும் ‘தினகரன்' நாளிதழுக்கு பேட்டியளித்திருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தம் மீது தமிழகத்தில் பதிவாகி இருப்பது கொலை வழக்கே அல்ல.. சேரி ஒன்றில் சட்டவிரோதமாக கூடியது தொடர்பான வழக்குதான் என்று பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். அத்துடன் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடவே கூடாது என்றும் டக்ளஸ் கூறியுள்ளார்.
இலங்கை தினகரன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கேள்வி: 13ஆவது திருத்தம் கொண்டு வரப்படுவதில் இந்தியா பெரும் பாத்திரம் வகித்தது. இந்தியா இன்னுமே அந்தப் பாத்திரத்தை தொடர்ந்தும் வகிப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில் : உள்நாட்டிலேயே தீர்வு ஒன்றைக் காண வேண்டுமென்பதே எனது கருத்தாகும். அவர்களால் மருத்துவ மாது போன்றே உண்மையில் தொழிற்பட முடியும். தாய் நாடான இலங்கை தனது குழந்தையை பிரசவிக்கும். வெளிநாட்டுத் தலையீடுகள் மேலும் பிரச்சினைகளைச் சிக்கலாக்கவே உதவும் தமிழ்க்கூட்டமைப்பு இந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கும் உதவிதேடிச் செல்கின்றது. இது ஒரு முறையான வழியல்ல. மேலும் பல்வேறு தடுமாற்றங்களை ஏற்படுத்தவே இது வழிவகுக்கும் வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணசபையின் வரதராஜப் பெருமாளின் நியமனம் கூட தவறுகளை பல ஏற்படுத்தியது. எஎனக்கு இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தப் பிரச்சினையை யதார்த்த ரீதியில் தீர்த்துவைக்க முடியும்.
கேள்வி : இந்திய நீதிமன்றம் உங்களுக்கெதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளதே. இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு கையாள்கின்aர்கள்?
பதில் : தமிழ்நாட்டில் சேரிப்புறமொன்றில் சட்டவிரோத கூட்டம் ஒன்றை கூட்டியதாக என்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது ஒரு கொலைக் குற்றச்சாட்டல்ல. ஆனால் தமிழ் ஊடகங்கள் இதனை ஊதிப் பெருப்பிக்கின்றன. இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றத்தில் தான் என்மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சென்னை நீதிமன்றில் எனக்கு நீதி கிடைக்காவிடின் நான் புதுடெல்லியிலுள்ள மேல் நீதிமன்றில் நீதி கோருவேன். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் செல்வேன். நான் அமைதியை நிலைநாட்டவே அந்தப் பகுதிக்கு சென்றேன். வரதராஜப் பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் அங்கு நின்றனர் என்று கூறியிருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா.