For Daily Alerts
Just In
இலங்கை: வட மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு கேபி- டக்ளஸ் தேவானந்தா போட்டி?

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆளும் கட்சியான மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக குமரன் பத்மநாபா என்ற கேபி போட்டியிடக் கூடும் என்றும் டக்ளஸ் கூறியுள்ளார்.
இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது வேட்பாளரை நிறுத்தும் நிலையில் மும்முனைப் போட்டி உருவாகலாம்.