For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபுதாபியில் கேரள டாக்டர் கொலை- பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது

By Mathi
Google Oneindia Tamil News

துபாய்: அபுதாபியில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ராஜன் டேனியலை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் அல் அலி மருத்துவமனையில் டாக்டர் ராஜன் டேனியல் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த வியாழக்கிழமையன்று பணியில் இருந்த போது மிகப் பெரிய கத்தியுடன் உள்ளே நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவன் ஆட்டை வெட்டுவது போல் வெட்டிக் கொலை செய்திருக்கிறான்.

தமது உறவினர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததற்கு டாக்டர் ராஜன் டேனியலே காரணம் என்பதால் தாம் அவரைக் கொலை செய்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கூறியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் அபுதாபியில் டாக்டர் ராஜன் பணிபுரிந்து வந்தார்.

இக்கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Indian doctor Rajan Daniel's throat was slit inside a hospital in Abu Dhabi by a Pakistani man who blamed him for his relative's death, a media report said on Saturday. The Pakistani was armed with a big knife when he stormed the private hospital on Thursday. He grabbed the Indian urologist and fatally stabbed him after the death of his relative, reported web site Emirates 24/7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X