For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்போசிஸ் அதிகாரிகளுக்கு இனி 'எக்கனாமிக் கிளாஸ்' தான்.. 'பிஸினஸ் கிளாசில்' பறக்க தடை!

By Chakra
Google Oneindia Tamil News

Infosys
பெங்களூர்: செலவுகளைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தனது மூத்த அதிகாரிகள் விமானங்களில் பிஸினஸ் கிளாசில் பறப்பதற்கு இன்போசிஸ் தடை விதித்துள்ளது. இனி இவர்கள் எக்கனாமிக் கிளாசில் தான் பறப்பார்களாம்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் பயணச் செலவுகளுக்காக என இன்போசிஸ் ரூ. 382 கோடி செலவிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் செலவான தொகை ரூ. 753 கோடியாகும்.

சமீபத்தில் ஊதிய உயர்வை அறிவித்ததால் ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையை சமாளிக்க இந்த பயணச் செலவு கட்டுப்பாட்டை அமலாக்குவதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவான விகிதத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சாப்ட்வேர் துறை 11 முதல் 14 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என நாஸ்காம் தெரிவித்துள்ள நிலையில், தனது வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகவே இருக்கும் என்று இன்போசிஸ் கூறியுள்ளது நினைவுகூறத்தக்கது.

மேலும் கடந்த ஏப்ரலில் தர வேண்டிய ஊதிய உயர்வை இன்போசிஸ் அக்டோபரில் தான் தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Infosys will curtail business-class travel privileges of its senior executives as part of its plans to cut costs amid a tough demand environment for India's second-largest information technology services company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X