For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒபாமாவுக்கு உலகம் பூராவும் அமோக ஆதரவு... புதிய வரலாறு படைத்தார்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிய வரலாறு படைக்கிறார். அவர் மீண்டும் அதிபராக வேண்டும் என்று கிட்டத்தட்ட உலகம் பூராவும் ஆதரவு காணப்படுகிறதாம். அமெரிக்கர் அல்லாதோர் மத்தியில் ராம்னியை விட ஒபாமாவுக்கே அமோக ஆதரவு காணப்படுகிறதாம்.

Obama

36 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஐந்தில் நான்கு பேரின் ஆதரவு ஒபாமாவுக்குக் கிடைத்துள்ளதாம். மிட் ராம்னிக்கு மிக மிக குறைந்த ஆதரவே காணப்படுகிறதாம். சீனாவில் மட்டுமே ராம்னி அடுத்த அதிபராக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான போட்டியில் ஒபாமாவும், ராம்னியும் மோதி வருகின்றனர். இருவருமே சம பலத்துடன் இருப்பதாக கூறப்பட்டாலும் கூட ஒபாமாவுக்கே அதிக ஆதரவு காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அவரே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பலரும் பேச ஆரம்பித்து விட்டனர்.

அமெரிக்கர்கள் கருத்து எப்படி இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உலக நாடுகளில் நிலவும் கருத்து என்னவென்றால் ஒபாமாவே மீண்டும் அதிபராக வேண்டும் என்பதே. உலகம் முழுவதும் அமெரிக்கர் அல்லாத 5 லட்சத்து 70 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் ஒபாமாவுக்கே அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

அமெரிக்கா தவிர்த்து மொத்தம் 36 நாடுகளில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 81 சதவீதம் பேர் ஒபாமாவை ஆதரித்துள்ளனர். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவரே அதிபராக இருக்க வேண்டும் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர்தான் ராம்னிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.எஸ்.என். இணையதளம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

சீனாவில் மட்டுமே ராம்னி அதிபராக வேண்டும் என்று சொல்லியுள்ளனர். அங்கு 51 சதவீதம் பேர் ராமனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 64 சதவீதம் பேர் ஒபாமாவையும், 36 சதவீதம் பேர் ராம்னியையும் ஆதரித்துள்ளனர். இங்கிலாந்தில் 85 சதவீதம் பேர் ஒபாமாவை ஆதரித்துள்ளனர்.

பிற நாட்டு ஆதரவு விவரம்

அர்ஜென்டினா - ஒபாமா 83, ராம்னி 17
ஆஸ்திரியா - ஒபாமா 93, ராம்னி 7
பெல்ஜியம் - ஒபாமா 93, ராம்னி 7
பிரேசில் - ஒபாமா 90, ராம்னி 10
கனடா - ஒபாமா 83, ராம்னி 17
சிலி - ஒபாமா 80, ராம்னி 20
சீனா - ஒபாமா 48, ராம்னி 52
கொலம்பியா - ஒபாமா 77, ராம்னி 23
கோஸ்டாரிகோ - ஒபாமா 83, ராம்னி 17
பின்லாந்து - ஒபாமா 93, ராம்னி 7
பிரான்ஸ் - ஒபாமா 88, ராம்னி 12
ஜெர்மனி - ஒபாமா 92, ராம்னி 8
கிரீஸ் - ஒபாமா 82, ராம்னி 18
ஹாங்காங் - ஒபாமா 85, ராம்னி 15
இந்தோனேசியா - ஒபாமா 87, ராம்னி 13
அயர்லாந்து - ஒபாமா 86, ராம்னி 14
இத்தாலி - ஒபாமா 87, ராம்னி 13
ஜப்பான் - ஒபாமா 75, ராம்னி 25
லத்தீன் அமெரிக்கா - ஒபாமா 79, ராம்னி 21
மெக்ஸிகோ - ஒபாமா 88, ராம்னி 12
மத்திய கிழக்கு -ஒபாமா 79, ராம்னி 21
பெரு - ஒபாமா 75, ராம்னி 25
பிலிப்பைன்ஸ் - ஒபாமா 62, ராம்னி 38
போலந்து - ஒபாமா 64, ராம்னி 36
போர்ச்சுகல் - ஒபாமா 94, ராம்னி 6
ரஷ்யா - ஒபாமா 73, ராம்னி 27
சிங்கப்பூர் - ஒபாமா 82, ராம்னி 18
தென் ஆப்பிரிக்கா - ஒபாமா 68, ராம்னி 32
ஸ்பெயின் - ஒபாமா 82, ராம்னி 18
ஸ்வீடன் - ஒபாமா 90, ராம்னி 10
தைவான் - ஒபாமா 69, ராம்னி 31
தாய்லாந்து - ஒபாமா 65, ராம்னி 35
துருக்கி - ஒபாமா 73, ராம்னி 27
வெனிசூலா - ஒபாமா 77, ராம்னி 23

English summary
It's shaping up to be one of the tightest U.S. presidential elections in history. But it seem there would be one clear winner if the rest of the world were to get to vote. A poll of more than 5,70,000 people across the globe has revealed non-Americans want Barack Obama to remain President of the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X