For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமா- க்ளிண்டன் இணைந்து பிரச்சாரம் - வரலாறு காணாத கூட்டம்!

By Shankar
Google Oneindia Tamil News

பிரிஸ்டோ (யு.எஸ்): இந்த அதிபர் தேர்தலில், ஒபாமாவுக்காக அதிகம் மெனக்கெடுவது முன்னாள் அதிபர் பில் க்ளிண்டன் என்றால் மிகையல்ல. கடந்த பல மாதங்களாக நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒபாமாவுக்கு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதோடு மட்டுமல்லாம, தேர்தல் நிதி திரட்டுவதிலும் பெரும் பங்காற்றி வருகிறார் க்ளிண்டன்.

க்ளிண்டனின் 8 வருட பொற்காலம்

க்ளிண்டனின் 8 வருட பொற்காலம்

கடந்த 24 வருட அமெரிக்க வரலாற்றில் பில் க்ளிண்டனின் 8 வருட ஆட்சி தான் பொற்காலமாக இருந்த்து. பதவியில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்தால் கூட, அதிபராக அமெரிக்க மக்கள் அதிகம் நேசிக்கும் தலைவராக மதிக்கப்படுகிறார். எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் கூட க்ளிண்டன் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுக்கின்றனர்.

வாயடைக்க வைத்த பொருளாதார வளர்ச்சி

வாயடைக்க வைத்த பொருளாதார வளர்ச்சி

க்ளிண்டனின் ஆட்சிக் காலத்தில், திட்டங்களைக் குறை கூறியவர்கள் கூட, பொருளாதார வளர்ச்சியை கண்டு வாயடைத்து போய் விட்டனர். தொடர்ந்து வந்த புஷ்-ஷின் எட்டாண்டு கால மோசமான ஆட்சி க்ளிண்டனுக்கு மேலும் புகழ் சேர்த்தது. அதிபராக இருந்து ஒய்வு பெற்ற பின்தான் அவருக்கு அதிக புகழ் என்று கூட சொல்லலாம்

ஒபாமாவின் ஆட்சியும் க்ளிண்டன் ஆட்சியும்

ஒபாமாவின் ஆட்சியும் க்ளிண்டன் ஆட்சியும்

தனது ஒட்டு மொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி, ஒபாமாவுக்காக க்ளிண்டன் ஓட்டு வேட்டையாடி வருகிறார். ஜனநாயக் கட்சி மாநாட்டில் க்ளிண்டனின் பேச்சு நாடெங்கும் புதிய அலையை உருவாக்கியது. 'பொருளாதாரம் குறித்த ராம்னியின் கணக்கு சரியாக வரவில்லை' என்ற அவரது புள்ளி விவர பேச்சு, நடு நிலையாளார்களை சிந்திக்க வைத்தது.

மோசமான நிலையில் இருந்தார் ஒபாமா

மோசமான நிலையில் இருந்தார் ஒபாமா

'நான் ஆட்சிக்கு வந்த போது இருந்த நிலைமையை விட, ஒபாமா படு மோசமான பொருளாதார நிலையில் பொறுப்பேற்றார். நான் மட்டுமல்ல, வேறு எந்த அதிபராக இருந்தால் கூட, இந்த அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்தி, மேம்படுத்தியிருக்க முடியாது,' என்று பல விவரஙகளோடு விளக்கமாக கூறியிருந்தார்.

வரலாறு காணாத கூட்டம்

வரலாறு காணாத கூட்டம்

தொடர்ந்து முக்கிய பிரச்சார நிகழ்வுகளில் ஒபாமாவுடன் இணைந்து ஒரே மேடையில் தோன்றி வருகிறார் க்ளிண்டன். அந்த வகையில் தேர்தலின் இறுதிக் கட்டத்தில், கடும் போட்டி நிலவும் வர்ஜினியா மாநிலத்தில் இருவரும் கலந்து கொண்ட ப்ரிஸ்டோ நகர கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வர்ஜினியா முன்னாள் கவர்னரும் தற்போதைய செனட் வேட்பாளருமான டிம் கெய்னும் உடன் கலந்து கொண்டார். இந்த மாநிலத்தில் ஒரு தேர்தல் பிரச்சாரத்துக்கு இவ்வளவு பேர் கூடியது இதுவே முதல்முறையாக இருக்கும் என்கிறார்கள்.

அறிவிக்கப்படாத கொபசெ!

அறிவிக்கப்படாத கொபசெ!

"இந்த தேர்தலை பொது வாக்காளார்களுக்கு அதிபர் க்ளிண்டன் அளவுக்கு யாரும் எடுத்துச் செல்லவில்லை. நமது கட்சிக்கு அறிவிக்கப்படாத ‘கொள்கைப் ப்ரப்பு செயலாளராக' விவரங்களுடன் சாமானியர்களுக்கு எளிதாக புரியும் அளவுக்கு பிரச்சாரம் செய்யும் அதிபர் க்ளிண்டன், நாடெங்கிலும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் அமெரிக்க வரலாற்றில் மிகச் சிறந்த அதிபர். எனக்கு நல்ல நண்பராகவும் இருக்கும் அவருக்கு மிகுந்த நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்," என்று ஒபாமா புகழாரம் சூட்டினார்.

கொலொராடோவில் ராம்னி

கொலொராடோவில் ராம்னி

இன்னொரு போட்டி மாநிலமான கொலொராடோவில் இரண்டாவது முறையாக ஒபாமா வெற்றி பெற்றால், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவரால் இணைந்து பணியாற்ற முடியாது. பண்ணவும் மாட்டார் என்று ஒபாமாவை கடுமையாக சாடினார். அவரது நண்பரும் எதிர்க்கட்சியை சார்ந்தவருமான கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி, கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்படும் அதிபர் ஒபாமா என்று தொலைக்காட்சிகளில் பல முறை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ஐயோவாவிலும் ஒபாமா முன்னணி

ஐயோவாவிலும் ஒபாமா முன்னணி

ஒஹயோவைத் தொடர்ந்து ஐயோவா மாநிலத்திலும் ஒபாமா ஐந்து சதவீதம் முண்ணனியில் இருப்பதாக ஐயோவாவின், டெமாய்ன்ஸ் ரெஜிஸ்தர் பத்திரிக்கையின் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இந்த பத்திரிக்கை ராம்னிக்கு ஆதரவு தெரிவித்து வந்தது குறிப்பிடத் தக்கது.

1.71 லட்சம் புதிய. வேலை வாய்ப்புகள்

1.71 லட்சம் புதிய. வேலை வாய்ப்புகள்

இந் நிலையில், கடந்த மாதம் 1 லட்சத்து 71 ஆயிரம் புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இது எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமானதால் ஒபாமா தரப்பு மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முடிதான் நரைத்திருக்கிறது.. உள்ளத்தில் அதே வேகம்

முடிதான் நரைத்திருக்கிறது.. உள்ளத்தில் அதே வேகம்

வேலைவாய்ப்பு எண்ணிக்கையை சுட்டிக்காட்டி நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. பண்ண வேண்டிய வேலைகளும் காத்திருக்கிறது. தொடந்து முன்னேற்றத்தை நோக்கி பயணம் செய்ய ஆதரவு தாருங்கள். என் முடிதான் கொஞ்சம் நரைத்திருக்கிறது. உள்ளத்தில் இன்னும் அதே வேகம் இருக்கிறது... மேலும் பணியாற்ற சந்தர்ப்பம் தாருங்கள், என்று வேண்டுகோள் கொடுத்து வருகிறார் ஒபாமா.

வீக் பாயிண்டுகளில் தீவிர கவனம்

வீக் பாயிண்டுகளில் தீவிர கவனம்

ஒஹயோ, விஸ்கான்ஸின், ஐயோவா, நியூ ஹாம்ஷ்யர் மாநிலங்களில் முண்ணனியில் இருந்தாலும், ஃப்ளோரிடா மற்றும் வர்ஜினியாவுக்கும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள் ஒபாமா தேர்தல் குழுவினர். வெற்றியின் விளிம்பில் இருந்தாலும், கூடுதல் மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கு ஒபாமாவும், போட்டியை எப்படி சமாளித்து வெற்றி இலக்கை அடைவது என்று ராம்னியும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்!

English summary
Record number of people assembled for the joint campaign of President Barack Obama and Bill Clinton at Virginia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X