For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்களை மயக்கும் பலான பேச்சின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த பிபிஓ!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி அருகே நொய்டாவில் இயங்கி வந்த ஒரு பிபிஓ மையத்தின் பொது மேலாளர் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மையத்தின் பொது மேலாளர் ஆண்களை மயக்கும் தொலைபேசிப் பேச்சின் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் சம்பாதித்துள்ளார். மேலும் பெண்களை வைத்து பாலியல் தொழிலையும் இவர் நடத்தி வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் தவிர, ஒரு பெண் உள்ளிட்ட 3 ஊழியர்களும் கைதாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் ஒரு பிபிஓ நிறுவனத்திற்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த கும்பலிடம் சிக்கி ஏமாந்தவர்களில் சஞ்சய் குப்தா என்பவரும் ஒருவர். இவர் ஒரு வாட்ச்மேன். இவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. அதை நம்பி தொடர்பு கொண்டு பெரும் பணத்தை இவர் இழந்து விட்டாராம்.

அதுகுறித்து குப்தா கூறுகையில், என்னை ஒரு பெண் தொடர்பு கொண்டு பேசி உன்னிடம் பழக வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நான் அவருடன் பேசியபோது எனனை மயக்கும் வகையில் அவர் பேசினார். தினசரி பல மணி நேரம் என்னுடன் அவர் பேசுவார். அவரது பேச்சில் மயங்கிய நான் பெருமளவிலான பணத்தை அவரது வங்கிக் கணக்குக்கு போட்டேன். என்னுடன் உறவு கொள்வதாக அவர் உறுதியளித்ததால் அதை நம்பி பணத்தைப் போட்டேன். ஆனால் சில நாட்களுக்குப் பிறகுதான் நான் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. போலீஸில் புகார் கொடுத்தேன் என்றார்.

இந்த மையத்தில் பல கல்லூரிப் பெண்களை வேலைக்குச் சேர்த்து அவர்களை வைத்து மயக்கும் மொழி பேச வைத்து பல கோடி ரூபாய்களை இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் சுருட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தப் பெண்களுக்கு ஒரு மணி நேரம் வாடிக்கையாளர்களுடன் பேச ரூ. 20 கட்டணம் கொடுத்துள்ளனர். மேலும், 200 மணி நேரம் வாடிக்கையாளர்களுடன் அவர்கள் பேசினால் சிறப்புப் பணமாக ரூ. 6000 கொடுத்துள்ளனர். ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பேசினால் அவர்களுக்குப் பணம் தரப்பட மாட்டாதாம்.

வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் உண்டு. முதல் நிமிடத்திற்கு ரூ. 30 கட்டணமாம். அடுத்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2 ரூபாயம்.

மிகப் பெரிய அளவில் இதுபோல செய்து பெரும் பணத்தை இந்தக் கும்பல் சுருட்டியுள்ளதாம். இந்த கொள்ளைச் செயலில் டெலிபோன் நிறுவனத்திற்கும் பெருமளவில் பணம் போயுள்ளது. அதாவது அவர்களுக்கு 60 சதவீத பணம் போயுள்ளதாம். மீதமுள்ள பணத்தை இந்த நிறுவனம் எடுத்துள்ளது.

English summary
Four people have been arrested by the Noida cyber cell for allegedly running a call centre through which they made crores of rupees by seducing people on the phone. Police says that the general manager and three employees including a girl have been nabbed. They are also probing a big BPO company which is involved in the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X