For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பிபி'யை உட்காருமாறு உத்தரவிட்ட நித்தி வக்கீல்... வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிய நீதிபதி!

Google Oneindia Tamil News

Nithyanantha
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு வக்கீலைப் பார்த்து உட்காருங்கள் என்று நித்தியானந்தா தரப்பு வக்கீல் கடுமையாக கூறியதால் கடும் ஆவேசமடைந்தார் அரசு வக்கீல். இரு வக்கீல்களுக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது. இதைப் பார்த்த நீதிபதி பால் வசந்தகுமார், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டு விட்டார்.

மதுரை ஆதீன மடத்திலிருந்து நித்தியானந்தா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை எதிர்த்து அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நித்தியானந்தா தரப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் கந்தசாமிக்கும், நித்தியானந்தா வக்கீல் ராஜகோபாலுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. தன்னைப் பார்த்து வக்கீல் ராஜகோபால் உட்காருமாறு எப்படிக் கூறலாம் என்று கந்தசாமி கடுமையாக கேட்டார்.

இவர்களது சண்டையைப் பார்த்த நீதிபதி பால் வசந்தகுமார், இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டு விட்டார்.

வக்கீல்களின் மோதலால் உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

English summary
Nithyanantha's lawyer Rajagopal and Govt PP indulged in strong war of words in front of Judge Paul Vasanthakumar in Madras HC today. Angered over this argument, Justice Vasanthakumar shifted the case to some other bench.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X