For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமாவும், ராம்னியும் செய்த விளம்பரச் செல்வு வெறும் 3882 கோடிதானாம்!!!

Google Oneindia Tamil News

Barack Obama and Mitt Romney
வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னியும் விளம்பரதத்திற்காக மொத்தமாக 3882 கோடி பணத்தை அள்ளி விட்டுள்ளதாக அமெரிக்க மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

12 மாகாணங்களில் ரூ. 3882 கோடி

இருவரும் சேர்ந்து செய்த செலவு ரூ. 3882 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரம் ஆகுமாம். 12 மாகாணங்களில் செய்த செலவுதான் இது.

ஒஹியோவில்தான் ஓஹோன்னு செலவு...

ஒஹியோ மாகாணத்தில்தான் இரு வேட்பாளர்களும் மிகப் பெரிய அளவில் பணத்தை வாரியிறைத்துள்ளனர். அங்குள்ள விமான நிலையம், உள்ளூர் கேபிள் டிவி, ரேடியோ, டிவி என சகலத்திலும் இவர்கள் விளம்பரம் செய்ய கொட்டி இறைத்த பணம் 796.21 கோடியாகும்.

புளோரிடாவில் 725 கோடி, விர்ஜீனியாவில் 599 கோடி

இன்னும் இரு முக்கிய மாகாணங்களான புளோரிடாவில் இருவரும் சேர்ந்து செய்த விளம்பரச் செலவு ரூ. 725.31 கோடியாகும். விர்ஜீனியாவில் இறைக்கப்பட்ட பணத்தின் அளவு ரூ. 599.88 கோடியாகும்.

பெரும் லாபம் பார்த்த 10 டிவி நிறுவனங்கள்

மொத்தம் 10 டிவி நிறுவனங்கள்தான் இந்த விளம்பரங்களால் பெரும் லாபம் பார்த்துள்ளனவாம். அதில் ஆறு நிறுவனங்கள் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவை. கிளீவ்லாந்தைச் சேர்ந்தவை 4 மற்றும் கொலம்பஸைச் சேர்ந்தவை 2.

ஒபாமா செலவுக் கணக்கு ரூ 1417.91 கோடி

ஒபாமா தரப்பில் செய்யப்பட்ட பிரசார விளம்பரச் செலவின் தொகை ரூ. 1417 கோடியே 91 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ராம்னியின் விளம்பரச் செலவு ரூ. 981 கோடியே 63 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The campaigns of President Barack Obama and his Republican challenger Mitt Romney and their allies spent a record $ 712 million in 12 battleground states, according to US media report. In the most heavily contested swing state of Ohio, the campaigns and the various ostensibly independent committees supporting them saturated the airwaves with $ 146 million worth of commercials on broadcast and local cable, CNN reported citing a source tracking ad buys.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X