For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரு நாட்டின் மிகப் பழமையான 'மம்மியை' ஒப்படைத்தது பொலிவியா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Bolivia Mummi
லிமா: பல நூறு ஆண்டுகள் பழமையான குழந்தை மம்மி ஒன்றை பொலிவியாவிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளது பெரு. இதன் மூலம் தங்களின் கலாச்சார பெருமை மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தென் அமெரிக்காவில் சுமார் 700 வருடங்களுக்கு முன்பு 'இன்கா கலாச்சார மக்கள்' வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு முந்தைய காலத்திய பெரு நாட்டுக்கு சொந்தமான ஒரு குழந்தை மம்மியை, புராதானப்பொருட்கள் கடத்தல் கும்பல் ஒன்று கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொலிவியாவிலிருந்து பிரான்சுக்கு கடத்த இருந்தனர். அதை பொலிவியா அரசு அப்போது கைப்பற்றியது.

வேறொரு குழந்தையின் ஒரு காலுடன் இருந்த இந்த மம்மி பாதுகாப்பாக இருக்க லாமா மற்றும் அல்பகாஸ் விலங்குகளின் முடிகளால் ஆனா கம்பளியால் மூடப்பட்டிருந்தது. 2 வயதான இந்த குழந்தை மம்மி ஆணா அல்லது பெண்ணா என்று ஆராய்சியாளர்களால் அறிய முடியவில்லை.

பெரு நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த குழந்தை மம்மியை மீட்க்கும் முயற்சியை பெரு நாடு தொடர்ந்து மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொலிவியா நாட்டின் கலாச்சார அமைச்சர், முதுகு சாய்ந்தாவாறு உட்கார்ந்த நிலையில் இருக்கும் குழந்தை மம்மியை பெரு நாட்டிடம் முறைப்படி ஒப்படைத்தார். இதனைப் பெற்றுக்கொண்ட பெரு நாட்டின் அமைச்சர், எங்கள் வம்சம் மற்றும் பரம்பரையின் பெருமையை உலகுக்கு காட்டும் ஒரு சிறிய மாதிரியே இந்த குழந்தை மம்மி என்று தெரிவித்தார்.

முந்தைய இன்கா கலாச்சாரத்தின் மையமாக விளங்கிய பெரு நாட்டின் செராமிக்ஸ், வெள்ளி, தங்கம் மற்றும் அரிய ஓவியங்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் பெரு நாடு கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lima - Bolivian authorities on Tuesday returned to Peru the ancient mummy of a young girl that was intercepted by police as it was about to be illegally shipped to France.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X