For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒபாமா வெற்றிப் பேச்சை திசை திருப்பிய கொண்டையில் கொடி வைத்த பெண்!

Google Oneindia Tamil News

Barack Obama
சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறையாக வெற்றி பெற்றதும் பாரக் ஒபாமா தனது ஆதரவாளர்களிடையே பேசியபோது அவரது பேச்சை விட அவருக்குப் பின்னால் நின்றிருந்த பெண்தான் அனைவரையும் கவர்ந்திழுத்தார். காரணம், அவரது கொண்டையில் குத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க தேசியக் கொடி.

ஒபாமாவின் வெற்றிப் பேச்சு நேரடியாக டிவிகளில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஒபாமாவைச் சுற்றிலும் அவரது ஆதரவாளர்கள் நிறையப் பேர் கூடி நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் அனைவரையும் ஈர்த்தார்.

கருப்பர் இனத்தைச் சேர்ந்த அப்பெண் தனது தலையில் தேசியக் கொடியை குத்தி வைத்திருந்தார். அது பலரையும் கவர்ந்திழுத்தது. யார் இந்தப் பெண் என்று கேட்டு ஏகப்பட்ட டிவிட்டர் செய்திகள் ஜெட் வேகத்தில் பறந்தன.

ஹேர்பிளாக் என்ற பெயரில் உடனடியாக ஒரு டிவிட்டர் கணக்கையும் தொடங்கி கலக்கி விட்டனர் அமெரிக்கர்கள். அதில், ஒருவர் இப்படி எழுதியிருந்தார்...

எல்லோரும் பார்க்கிறாங்கம்மா, தலையில்இருக்கும் கொடியை முதலில் எடு என்று இவரது அம்மா மெசேஜ் அனுப்பியிருப்பார் என்று நம்புகிறேன்...

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான அரசியல் பீலிங்...!

English summary
Barack Obama should have been the star of his victory address on Wednesday, but a mystery "Hair flag lady" standing behind the US president stole the limelight. As the president gave his speech TV channels captured the Obama supporter proudly showcasing her patriotism by sporting a flag attached to her head, achieving quick Internet fame as the Twitter hashtag #Hairflag went viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X