For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவிஸ் வங்கியில் அம்பானி சகோதரர்கள், ரிலையன்ஸுக்கு ரூ. 400 கோடி கருப்புப் பணம்- கெஜ்ரிவால்

By Mathi
Google Oneindia Tamil News

Anil Ambani and Mukesh Ambani
டெல்லி: மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா, பாஜக தலைவர் நிதின் கட்காரி ஆகியோரது முறைகேடுகளை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் இம்முறை ‘இந்திய தொழிலதிபர்களை' இலக்கு வைத்திருக்கிறார். கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியுள்ள இந்த தொழிலதிபர்கள் யார் என்ற நீண்ட பட்டியலையும் கெஜ்ரிவால் வெளியிட்டிருக்கிறார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், சுவிஸ் வங்கியில் மட்டும் 700 பேரின் ரூ6 ஆயிரம் கோடி பணம் பதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணம் பதுக்கியோர் மீது சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தது. அம்பானி சகோதரர்களோ பிரணாப் முகர்ஜியிடம் சிபிஐ சோதனை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் என்றார்.

இன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் கெஜ்ரிவால் வெளியிட்ட சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியிருக்கும் சிலரது விவரம்:

- முகேஷ் அம்பானி - ரூ100 கோடி

- அனில் அம்பானி - ரூ100 கோடி

- ரிலையன்ஸ் குழுமம் -ரு200 கோடி

- ரிலையன்ஸ் குழுமத்தில் அங்கம் வகித்த சந்தீப் டான்டன் - ரூ125 கோடி

- சந்தீப் டான்டனின் மனைவியும் காங்கிரஸ் எம்.பியுமான அனு - ரூ125 கோடி

- திருபாய் அம்பானியின் அமனைவி கோகிலாவுக்கு அக்கவுண்ட் இருந்தது. ஆனால் தற்போது பேலன்ஸ் ஏதும் இல்லை

- ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர் நரேஷ் கோயல் - ரூ80 கோடி

- டாபர் நிறுவனத்தின் 3 பேர் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு- ரூ25 கோடி

- மோடெக் மென்பொருள் நிறுவனம்- ரூ2,100 கோடி பதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

English summary
In his fresh expose against the 'corrupt' in the Indian system, activist-turned-politician Arvind Kejriwal raked up the issue of blackmoney at a press meet in New Delhi on Friday afternoon. Kejriwal said HSBC's Geneva branch has accounts of 700 Indians. He said France had given this list to the central government five years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X