For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிகவில் இருந்து மூன்று செயலாளர்களை நீக்கிய விஜயகாந்த்

By Chakra
Google Oneindia Tamil News

Vijaykanth
சென்னை: தேமுதிகவில் இருந்து 2 ஒன்றியச் செயலாளர்கள், ஒரு மாவட்ட துணை செயலாளரை நீக்கியுள்ளார் கட்சியின் தலைவரான விஜய்காந்த்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், இராதாபுரம் ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் பி. சுரேஷ், களக்காடு ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் ஏ. செல்லத்துரை மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளராக செயல்பட்டு வரும் தாமஸ் அமிர்தராஜ் ஆகியோர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் வகித்து வந்த கழக பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்கள்.

இவர்களுடன் கழக தொண்டர்கள் யாரும் கழகம் சம்பந்தமாக எந்தவிதமான தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதியவர்கள் நியமனம்...

தேமுதிகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், இராதாபுரம் ஒன்றிய கழக பொறுப்பாளராக எம். கண்ணன் (திருநெல்வேலி மாவட்ட தொழிற்சங்க தலைவர்), களக்காடு ஒன்றிய கழக பொறுப்பாளராக ஐ.பி. விஜய கணேசன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் விஜய்காந்த்.

தேமுதிகவில் பெரும் உள்பூசல் நடந்து வருவதும், 4 எம்எல்ஏக்கள் ஏற்கனவே அதிமுக ஆதரவாளர்களாக மாறிவிட்டதும், மேலும் பலர் மாறத் தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தேமுதிகவை உடைக்க அதிமுக தீவிரம் காட்டி வரும் நிலையில் கட்சியில் நீக்கங்களை ஆரம்பித்துள்ளார் விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMDK president Vijaykanth has removed two local secretaries and one district deputy secretary from the party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X