For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க பொருளாதாரம்: இந்திரா நூயி உள்ளிட்ட 3 இந்தியர்களுடன் ஒபாமா ஆலோசனை

By Chakra
Google Oneindia Tamil News

Indira Nooyi and Obama
வாஷிங்டன்: அமெரிக்க பொருளாதாரத்தை நிலை நிறுத்துவது தொடர்பாக 3 அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தவுள்ளார்.

இப்போதைய பொருளாதார பிரச்சனைகள், நிதி நிர்வாகம், தொழிலாளர் நலன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இவர்களது ஆலோசனையை ஒபாமா கோரியுள்ளார்.

பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயி, அமெரிக்க வளர்ச்சி மையம் அமைப்பின் தலைவர் நீரா தண்டன், சமூக மாற்றத்துக்கான மையத்தின் தலைவர் தீபக் பார்கவா ஆகியோரை ஆலோதனைகளுக்காக ஒபாமா அழைத்துள்ளார்.

அதே போல ஹனிவெல் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் டேவிட் கோட், வால்மார்ட் அதிபர் மைக் டியூக், ஜெனரல் எலெக்ட்ரிக் மூத்த செயல் அதிகாரி ஜெப் இம்மெல்ட், டெள பங்குச் சந்தையின் மூத்த அதிகாரி ஆண்ட்ரூ லிவேரிஸ், புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் ராபர்ட் மெக்டொனால்ட், போர்ட் கார் நிறுவனத்தின் ஆலன் முல்லே, ஐபிஎம் கம்ப்யூட்டர் நிறுவன அதிகாரி ஜின்னி ரோமெட்டி, செவ்ரான் பெட்ரோலிய நிறுவனத்தின் ஜான் வாட்சன், ஜெராக்ஸ் நிறுவனத்தின் உர்சுலா பர்ன்ஸ் ஆகியோரையும் ஆலோசனைகளுக்காக அழைத்துள்ளார் ஒபாமா.

English summary
US President Barack Obama has invited at least three Indian-Americans, including PepsiCo CEO Indra Nooyi, as part of his wider consultations with leaders from business, labour, civic community and Congress on the current economic crisis. Neera Tandon, president of the Centre for American Progress, an eminent US think-tank based in Washington and Deepak Bhargava from the Centre for Community Change are the other Indian-Americans to have been invited by Obama for consultations, a White House official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X