For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் தொலைபேசி இருந்தது!

By Chakra
Google Oneindia Tamil News

Osama bin Laden
வாஷிங்டன்: பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் தொலைபேசி இணைப்பு இருந்ததாக அமெரிக்கா இப்போது தெரிவித்துள்ளது.

இந்த வீட்டில் வைத்து கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கப் படையினரால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வீட்டில் தொலைபேசி இணைப்போ, இண்டர்நெட் வசதியோ இல்லை, ஆட்களிடம் கடிதங்களைக் கொடுத்து அனுப்பியே தனது இயக்கத்தினரை ஒசாமா தொடர்பு கொண்டு வந்ததாக அமெரிக்கா கூறி வந்தது.

இந் நிலையில் அந்த வீட்டில் தொலைபேசி இணைப்பு இருந்ததாக அமெரிக்க கருவூலத்துறையின் Financial Crimes Enforcement Network பிரிவின் இயக்குனர் ஜெனீபர் சாஸ்கி கால்வெரி தெரிவித்துள்ளார்.

பண மோசடிகள், அன்னிய செலாவணி மோசடிகள் குறித்த கருத்தரங்கில் பேசிய அவர், தீவிரவாதத்துக்கு எதிராக எப்பிஐ அமலாக்கி வரும் திட்டங்களில் ஒன்று தான் ''சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அறிக்கை'' ("suspicious activity report" or SAR). சந்தேகத்துக்கிடமானவர்களின் தொலைபேசி பேச்சுகள், பண பட்டுவாடா ஆகியவை உள்ளிட்ட தகவல்களை இந்த அறிக்கை திரட்டுகிறது. இதனால் தங்களது சுதந்திரம் பறிபோவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், எங்களிடம் இருந்த SAR அறிக்கையில் இருந்த தொலைபேசி எண்ணில் இருந்து அபோடாபாத்தில் உள்ள ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதே போல அந்த எண்ணை ஒசாமாவின் அபோடாபாத் வீட்டில் இருந்த தொலைபேசியில் இருந்தும் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்றும் தெரியவந்தது என்றார்.

இதன்மூலம் ஒசாமாவின் வீட்டில் தொலைபேசி இருந்தது இப்போது தான் வெளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In a new revelation, a top US official has for the first time disclosed that American special forces had recovered a telephone from Osama bin Laden's Abbottabad compound in Pakistan, shedding new light on the so far known description of the al-Qaeda chief's hideout. The claim of a telephone being recovered from bin Laden's compound was made by Jennifer Shasky Calvery, Director of the Financial Crimes Enforcement Network in Department of Treasury, at a conference on money laundering, during which he highlighted the significance of "suspicious activity report" or SAR which is being implemented by the Federal Bureau of Investigation in its fight against terrorism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X