For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பால்தாக்கரே ஆசிரியாக பொறுப்பு வகித்த சாம்னா ஏடுகள் அஞ்சலி செலுத்தியது எப்படி?

By Mathi
Google Oneindia Tamil News

Bal thackeray
மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரே மிகவும் நேசித்த அவர் ஆசியராக இருந்த சாம்னா பத்திரிகைகள் இன்று அஞ்சலி செலுத்தும் வகையில் முதல் பக்கத்தில் எதுவும் செய்தி வெளியிடாமல் கறுப்பு கலரில அச்சிட்டிருக்கிறது.

சாம்னா என்ற மராத்திய மொழி பத்திரிகையும், 'Dopahar Ka Saamna' என்ற இந்தி மொழி பத்திரிகையும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடுகள். சாம்னாவில்தான் தமது கருத்துகளை பால்தாக்கரே கடைசி காலம் வரை வெளியிட்டு வந்தார்.

மராத்தி மொழி சாம்னா ஏடுக 1988 ஆம் ஆண்டு ஜனவரி 23-ல் தொடங்கப்பட்டது. இந்தி மொழி ஏடு 1993-ல் தொடங்கப்பட்டது. இவை இரண்டுமே இதுநாள் வரையில் இப்படி கறுப்பு கலரில் முதல் பக்கத்தில் எந்த ஒரு சம்பவத்துக்காகவும் அச்சிட்டது இலை.

பால்தாக்கரே மறைந்துவிட்டார் என்று எழுதாமல் அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக 'விடைபெற்றுவிட்டார். சொர்க்கத்துக்கு சென்றுவிட்டார் என்ற பாணியில் செய்திகளை சாம்னா ஏடுகள் வெளியிட்டுள்ளன.

பொதுவாக சாம்னாவின் இந்தி மொழி ஏடு ஞாயிற்றுக்கிழமை வெளியாகாது. இன்று சிறப்பு இதழாக வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல் உள்பகுதிகளில் வழக்கமான கலரில் கோடுகள் இல்லாமல் அனைத்தும் கறுப்பு நிற கோடுகளாகவே அச்சிடப்பட்டிருக்கின்றன.

இந்தியப் பத்திரிகை வரலாற்றில் தமது பத்திரிகை ஆசிரியருக்காக இப்படி அஞ்சலி செலுத்தியது சாம்னா ஏடுகள்தான் என்கிறார் சாம்னாவின் எக்ஸ்கியூட்டிவ் எடிட்டர் பிரேம் சுக்லா!

English summary
Shiv Sena chief Bal Thackeray's favourite newspapers Saamna (in Marathi) and Dopahar Ka Saamna (in Hindi) were Sunday published with a full black cover jackets and full black cover pages.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X