For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் ஜெயிச்சா ராகுல்தான் பிரமதமராம்... - சொல்கிறார் ஜெயந்தி நடராஜன்

By Mathi
Google Oneindia Tamil News

Jayaanthi Natarajan
சென்னை: 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராகிவிடுவார் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசுகையில். நாடாளுமன்ற மக்களவைக்கு திடீர் தேர்தல் வருமா? காங்கிரசால் சந்திக்க முடியுமா? என்று எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு தெளிவான பதிலைத் தருவோம்.

பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தலைவர் ஊழல் வழக்கில் சிறையைவிட்டு இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார். இப்பொழுது நிதின் கத்காரி மீது ஊழல் புகார் சொல்லப்படுகிறது. காங்கிரசைப் பற்றி விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் ரூ9 ஆயிரம் கோடிக்குத்தான் போயுள்ளது. கணக்கு தணிக்கை அதிகாரி சொன்னது தவறு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தலை சந்திக்க எப்போதும் காங்கிரஸ் தயாராக இருக்கிறது. 2014 வரை காங்கிரஸ் ஆட்சி நீடிக்கும். அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். மத்தியில் ஆட்சி அமைக்கும். ராகுல் காந்தி பிரதமராவார்.

மம்தா பானர்ஜி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரட்டும்.. எங்கள் பலமும், வலுவும் அவருக்கு தெரியும். கூட்டணி கட்சிகள் எதுவும் எங்களுக்கு நெருக்கடி தரவில்லை என்றார்.

English summary
Union Minister Jayaanthi Natarajan told reporters that Congress will win and retain the power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X