For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈமு கோழி மோசடி: சுசி நிறுவனர் குருசாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

Emu
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த சுசி ஈமு கோழி பண்ணை உரிமையாளர் குருசாமியை குண்டர் சட்டத்தின் கீழி சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

ஈமு கோழிகளை வளர்க்க ஊக்கத்தொகை, போனஸ் கொடுப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூல் செய்தார் சுசி ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் குருசாமி. ஆனால் வாக்களித்தபடி ஊக்கத் தொகை, போனஸ் கொடுக்கவில்லை என்பது குருசாமி மீதான புகார். ஏற்கெனவே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரை தவறாகப் பயன்படுத்தினார் என்பதற்காக சிறைக்குப் போயிருக்கிறார் குருசாமி.

அவரிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மீண்டும் புகார் கொடுக்க தலைமறைவானார் குருசாமி. பின்னர் போலீசிடம் சிக்கிய குருசாமி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

குருசாமியின் நிறுவனத்தின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன. சுசிஈமு தமிழகம் முழுவதும் குருசாமி மீது 4 ஆயிரம் பேர் புகார் கொடுத்திருக்கின்றனர்.இதைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தனர். இப்பரிந்துரையை ஏற்ற ஈரோடு ஆட்சியர் சண்முகமும் சுசிஈமு நிறுவனர் குருவைகுண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்..

English summary
Erode Collector Shanmugam ordered the detention of Susi Emu Farms founder Gurusamy under the Goondas Act,today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X