For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாக்கரேவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட பெண், லைக் கொடுத்த பெண் கைது

By Siva
Google Oneindia Tamil News

facebook
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடக்கையில் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரது உறவினரின் கிளினிக்கை சிவ சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது,

தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் லைக் கொடுத்திருந்தார். இந்த தகவலைப் பார்த்த சிவ சேனா தொண்டர்கள் கொதிப்படைந்தனர். இதற்கிடையே ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட பெண், அதை லைக் கொடுத்த பெண் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் கமெண்ட் போட்ட பெண் அதை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டபோதிலும் பால்கர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் கிளினிக்கை சுமார் 2,000 சிவசேனா தொண்டர்கள் சேர்ந்து அடித்து, நொறுக்கினர்.

English summary
A 21-year-old woman was arrested for questioning complete shutdown in Mumbai for the funeral of Bal Thackeray, the Shiv Sena patriarch who passed away on Saturday at the age of 86. Another girl who 'liked' the comment was also arrested. A mob comprising 2,000 Shiv Sena workers attacked and ransacked the orthopaedic clinic of her uncle at Palghar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X