For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு விதிமுறைகளை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்கள் இன்று ஸ்டிரைக்

By Siva
Google Oneindia Tamil News

School Van
சென்னை: பள்ளி வாகனங்களுக்கு அரசு விதித்துள்ள சில விதிமுறைகளை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார் கூறுகையில்,

கடந்த சில மாதங்களு்க்கு முன்பு தாம்பரம் அருகே உள்ள சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி பள்ளி வேனில் இருந்த ஓட்டையில் தவறி விழுந்து பலியானார். இதையடுத்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை வகுக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு 21 புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. ஆண்டுக்கு 4 முறை பள்ளி வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எப்.சி. பெற வேண்டும். வாகனங்களில் அகலமாக 2 வழி இருக்க வேண்டும். வாகனங்களில் கண்டிப்பாக கண்டக்டர் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 விதிமுறைகளை ஏற்க முடியாத நிலையில் உள்ளோம்.

அதனால் முதல் கட்டமாக இந்த புதிய விதிமுறைகளை ஏற்க முடியாது என்பதை தெரிவிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் வாகனங்கள் இன்று ஒரு நாள் ஓடாது என்று முடிவு செய்துள்ளோம். எனவே, அதனால் ஏற்படும் சிரமத்தை பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஓடவில்லை.

English summary
Private school vehicles in TN are on strike today as they couldn't accept government's new regulations for the school vehicles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X