For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எலும்புக் கூடுகளுடன் செக்ஸ்: ஸ்வீடன் பெண் கைது!

By Chakra
Google Oneindia Tamil News

Skeleton
ஸ்டாக்ஹோம்: எலும்புக் கூடுகளுடன் செக்ஸில் ஈடுபட்டதாக ஸ்வீடனைச் சேர்ந்த 37 வயது பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு உடல்களின் 100 எலும்புகள் கிடைத்துள்ளன.

மேலும் எலும்புக் கூடுகளை கட்டிக் கொண்டும், மண்டை ஓடுகளுக்கு அவர் முத்தம் கொடுப்பதும் போன்ற படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஸ்வீடனின் தென் மேற்கில் உள்ள கோதன்பெர்க் நகரைச் சேர்ந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இன்டர்நெட் forum-ல் எலும்புக் கூடுகளுடன் உடலுறவு கொள்வது குறித்து மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார். எனக்கு வாய்க்கும் கணவன், உயிரோடோ அல்லது பிணமாகவோ இருந்தாலும், இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த எலும்புகளுடன் படுக்கையில் நான் பெரும் செக்ஸ் இன்பம் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

இவரது வீட்டில் 6 மண்டை ஓடுகள், ஒரு முதுகெலும்பு உள்ளிட்ட 100 மனித உடல் எலும்புகள் கிடைத்துள்ளன.

மேலும் ஸ்வீடனின் ஒரு பிணவறையைத் திறக்கும் access code-கள் அடங்கிய சிடியும் இவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்வீடனின் உப்சலாவில் வசிக்கும் ஒரு நபருக்கு 3 மண்டை ஓடுகளையும், ஒரு முதுகெலும்பையும் விற்றுள்ளதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் எலும்புக் கூடுகளுடன் தான் செக்ஸ் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என்று மறுத்துள்ளார். வரலாற்று ஆய்வுகளில் ஆர்வம் கொண்டதால் இந்த எலும்புகளை சேகரித்ததாகக் கூறியுள்ளார்.

இவர் மீது 'இறந்தவர்களின் அமைதியைக் கெடுத்ததாக' குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மாதமே இவர் கைது செய்யப்பட்டாலும் அது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இப்போது கோதன்பெர்க் நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த விவரம் வெளியே தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் இவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.

English summary
A 37-year-old woman from Sweden allegedly kept skeleton parts in her flat so that she could have sex with them. The woman is suspected of using 100 parts, which included six skulls and one backbone, in “sexual situations” and was charged with violating the peace of the deceased, prosecutors said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X