For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கசாப்பை தூக்கில் போட்ட 'ஆபரேஷன் X" .....6 வாகனங்கள், 17 அதிகாரிகள்... அந்த 36 மணிநேரம்

By Mathi
Google Oneindia Tamil News

Ajmal Kasab
மும்பை: பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் க்சாப்பை தூக்கில் போடுவதற்காக நடத்தப்பட்ட "ஆபரேஷன் X" எப்படி நடத்தப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

திங்கள்கிழமை இரவு....

மும்பை மாநகர காவல்துறை ஆணையர் டாக்டர் சத்யபால்சிங், சட்டம் ஒழுங்கு ஐ.ஜி டீவென் பார்தி, கிரைம் பிராஞ்ச் யூனிட்- 1 போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மகேளா, துணை கமிஷனர் 9 பிரவீன் பட்டீல் ஆகியோரை அழைக்கிறார்.. மூவருக்கும் ஆபரேஷன் X பற்றி விவரிக்கப்படுகிறது.... ஆபரேஷனை மேற்பார்வையிடும் பொறுப்பு பார்திக்கும் கசாப்பை சிறை மாற்றும் போது பாதுகாப்புக்கு செல்ல மகேளா, பட்டீலுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது....

திங்கள்கிழமை நள்ளிரவு நேரம்... 6 வாகனங்களில் 17 காவல்துறையினர் அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டிருந்த ஆர்தர் சாலை சிறைக்கு செல்கின்றனர்... அங்கிருந்து கசாப்பை வெளியே கொண்டுவரும் போது செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணி.. ஆபரேஷன் தொடங்குகிறது.... முதல் வாகனத்தில் கமாண்டோ படையினர்

2-வது வாகனம் ஸ்கார்பியோவில் கமாண்டோ படையினர் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன்... 3வது வாகனத்தில் முகம் மறைக்கப்பட்ட நிலையில் கசாப்... அவனுடன் காவல்துறை அதிகாரி மகிளே... 4மற்றும் 5வது வாகனங்களில் கமாண்டோக்கள்... மற்றொரு காவல்துறை அதிகாரி பட்டீல் கடைசி வாகனத்தில்....

செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு எரவாடா சிறையை சென்றடைகிறது இந்த வாகனங்கள்... கசாப்பை பொறுத்தவரையில் வழக்கமான சிறை மாற்றம் என்றுதான் நினைத்திருக்கிறான்...

செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்குத்தான் கசாப்புக்கு சொல்லப்படுகிறது.. இன்னும் சில மணி நேரங்களில் தூக்கிலிடப்படுகிற செய்தியே!

இரவில் உணவு சாப்பிட கசாப் மறுத்து விடுகிறான்... உறங்கவும் இலை... பொழுது விடிகிறது.... வெள்ளை உடைகளை உடுத்திக் கொள்கிறான்.. நமாஸ் செய்து கொண்டு தூக்கு மேடைக்கு புறப்பட தயாராகிறான்... அப்போது தமது கடைசி ஆசையாக ... "என் அம்மாவிடம் இதைப் பற்றி சொல்லிவிடுங்கள்" என்று சொல்கிறான் கசாப்...

புதன்கிழமை காலை 7.30 மணி... கசாப்பின் முகம் கருப்பு துணிகளால் மூடப்படுகிறது. 10 நிமிடம் காவல்துறை அதிகாரி பார்தி. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்...

அதில் இடம் பெற்றிருந்த வாசகம், "ஆப்பரேஷன் X " முடிவடைந்தது......"

English summary
Six vehicles, 31 hours and 17 officers were involved in the execution of what is arguably one of India's most secretive and swiftly actualised operation, referred to covertly as Operation X.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X