For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆங்கிலம் தெரியாததால் இந்தியரை டிஸ்மிஸ் செய்த இங்கிலாந்து மருத்துவமனை

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றி்ல் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக வேலை பார்த்த இந்தியரான ரமணி ராமசாமிக்கு சரியாக ஆங்கிலம் பேச வரவில்லை என்று கூறி அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள தி கிறிஸ்டி மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக இருந்தவர் இந்தியரான ரமணி ராமசாமி. அவர் பேசும் ஆங்கிலம் புரியவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பலர் புகார் தெரிவித்தனர். அந்த மருத்துவமனையில் சேர்ந்த பிறகு அவர் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ளும் வகுப்புகளுக்குச் சென்றும் அவரால் சரியாக ஆங்கிலம் பேச முடியவில்லை என்ற குற்ற்ச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து நீக்கியுள்ளனர். ஏற்கனவே இந்தியாவில் ரேடியோகிராபராக பணியாற்றிய அவர் கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சென்றார்.

இது குறித்து ரமணி ராமசாமி கூறுகையில்,

என் மீது சுமத்தப்பட்டுள்ளது பொய்யான குற்றச்சாட்டு. நான் ஏற்கனவே மலேசியாவில் பணியாற்றினேன். அங்கு எனக்கு நல்ல மதிப்பு இருந்தது. நான் நன்றாகத் தான் ஆங்கிலம் பேசுவேன் என்றார்.

English summary
Ramani Ramaswamy, an Indian radiographer has been sacked from his job at a UK cancer hospital after six years following a string of complaints that he could not speak clear English, a charge which he termed as "cooked up".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X