For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை இறுதிப் போரில் பிரபாகரனுக்கு தவறான நம்பிக்கை கொடுத்த வைகோ-நெடுமாறன் : கேபி பேட்டி(பகுதி 3)

By Mathi
Google Oneindia Tamil News

KP
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் தவ்றான நம்பிக்கையைக் கொடுத்தனர் என்று புலிகளின் சர்வதேச பொறுப்பளர் கேபி குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோ- நெடுமாறன்

இலங்கை ஊடகமான டெய்லி மிர்ரரில் வெளியான மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜூக்கு கேபி அளித்த பேட்டியில், பிரபாகரனைப் பொறுத்தவரை சமரசத்துக்கு இடமில்லாமல் போராட வேண்டும் என்ற மனநிலை உடையவர். அவர் எப்போதும் சமரசத்துக்கோ சரணடையவோ விரும்பாத்வர். மேற்குல நாடுகளை சந்தேகக் கண்ணோடு பார்த்தவர். இறுதிப் போரின் போது மேற்குலக நாடுகள் கொடுத்த உறுதி மொழிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என நினைக்கிறேன்... தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் ஆகியோர் தவறான நம்பிக்கையை கொடுத்திருக்கின்றனர்.. அதாவது இந்தியாவின் மத்தியில் பாஜக வெற்று பெற்று ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்.. தேர்தலுக்கு பிறகு நிலைமைகள் மாறலாம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர் என்று கேபி தெரிவித்திருக்கிறார்.

பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்றும் பிளான்

மேலும், பிரபாகரனின் மகன் சார்ளஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார். அவர் தமது குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டார். பிரபாகரன் குடும்பத்தை சிறிய ரக விமானம் மூலம் கள முனையிலிருந்து காப்பாற்றி அழைத்து செல்லத் திட்டமிட்டேன். இதற்கான செலவுத் தொகை 3.5 மில்லியன் டாலர். என்னிடம் அவளவு பணம் இல்லை.. இது தொடர்பாக புலிகளின் வெளிநாட்டு நிதி விவகாரங்களை கவனித்து வந்த நெடியவனிடம் பல முறை உதவி கேட்டேன். ஆனால் நெடியவனோ பணம் கொடுக்கவில்லை என்றும் அதில் கேபி கூறியுள்ளார்.

English summary
Revealing this in an interview to Daily Mirror on Saturday, the then head of the International Secretariat of the LTTE, Kumaran Pathmanathan (KP), said: “Tamil Nadu fellows like Vaiko and Nedumaran had given false hopes of a change in the situation (in India) after elections in mid-May, saying that the BJP will win overall and Jayalalithaa in TN.” Prabhakaran pinned his faith on Tamil Nadu and India because he did not trust the West, including the official peace broker, Norway, KP recalled in the interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X