For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு சவரன் தங்கம் 24,500 ரூபாயை தாண்டியது: நகை வாங்குவோர் கலக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jewells
சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு 64 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 24,544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை திடீர் உச்சத்தை தொட்டுள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரகாலமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.நேற்று ஒரே நாளில், தங்கம் விலை, கிராமுக்கு, 38 ரூபாய் உயர்ந்து, 3,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 304 ரூபாய் அதிகரித்து, 24,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.24 காரட், 10 கிராம் சுத்த தங்கம் விலை, 410 ரூபாய் அதிகரித்து, 32,730 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் திடீரென தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 3,068 ரூபாயாகவும், ஒரு சவரன் 25,544 ரூபாயாக உயர்ந்துள்ளது.

வெள்ளிக் கிழமையன்று தங்கம், கிராமுக்கு, 23 ரூபாய் உயர்ந்து, 3,022 ரூபாய்க்கும், சவரனுக்கு, 184 ரூபாய் அதிகரித்து, 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த இரு தினங்களில் மட்டும், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு, 69 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி, 68.50 ரூபாயிலிருந்து, 70.20 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 65,610 க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில், கடந்த இரு தினங்களில் மட்டும், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 20 முதல், 30 டாலர் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை அதிகரித்துள்ளது என்று சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். திருமண முகூர்த்த காலம் என்பதால் தங்கநகை வாங்க கடைக்கு செல்லும் நுகர்வோர்கள் இந்த அதிரடி விலை உயர்வினால் கலக்கமடைந்துள்ளனர்.

English summary
Gold prices in India, one of the world's leading consumers, hit a record high on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X