For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முட்டைகோஸ் பொறியலும்.. மூனு பாக்கெட் 'காண்டமும்', ப்ளீஸ்!

Google Oneindia Tamil News

Bizarre UK restaurant offers family planning leaflets with your meal
லண்டன்: ஹோட்டலுக்குப் போறீங்க.. சாப்ட்டு முடிக்கிறீங்க.. கடைசில என்ன வரும்.. பில் வரும். அத்தோடு ரெண்டு 'ஓஞ்ச' வாழைப்பழம், பீடா, சாக்லெட், மின்ட் ஆகியவையும் வரலாம். இதுதானே நம்ம ஊர் வழக்கம்.. ஆனால் இங்கிலாந்தில் ஒரு ஹோட்டலில் சாப்ட்டு முடிச்சு பில் வரும்போது கூடவே ஆணுறைகள் உள்ளிட்டவற்றையும் தருகிறார்களாம்.

ஆக்ஸ்போர்டில்தான் இந்த வித்தியாசமான ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் பெயரே Cabbages and Condoms என்று வினோதமாக வைத்துள்ளனர்.

இங்கிலாந்திலேயே இப்படி சாப்பாட்டோடு பாதுகாப்பான செக்ஸ் அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் தரும் முதல் ஹோட்டல் இதுதானாம். முதலில் இப்படிப்பட்ட ஹோட்டல் தாய்லாந்தில்தான் தொடங்கப்பட்டதாம். செக்ஸ் டூரிசத்திற்குப் பெயர் போனதாச்சே தாய்லாந்து... எனவேதான் இந்த லந்தை அங்கிருந்து ஆரம்பித்துள்ளனர். அங்கு 6 ஹோட்டல்கள் இப்படி உள்ளனவாம். அத்தனையும் ஹிட்டாம். எனவேதான் இபபோது இங்கிலாந்துக்கும் கிளை பரப்பியுள்ளனர்.

இந்த ஆக்ஸ்போர்ட் ஹோட்டலில் விதம் விதமான தாய்லாந்து நாட்டு உணவு வகைகள் கிடைக்கின்றன. கூடவே நமக்கு பாதுகாப்பான செக்ஸ் உறவுக்குத் தேவையான விஷயங்களையும் மெனு கார்டில் இணைத்து வைத்துள்ளனர். அதில் உள்ளதை ஆர்டர் செய்தால் சாப்பிட்டு முடித்து பில் தரும்போது அதையும் கூடவே தருகிறார்கள். பெஸ்ட் ஆப் லக் சொல்லியும் அனுப்பி வைக்கிறார்கள்.

மேலும், பாதுகாப்பான செக்ஸுக்கு என்னவெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த பிட் நோட்டீஸையும், அதாவது துண்டுப் பிரசுரத்தையும் கூடவே அளிக்கிறார்கள். அத்தோடு நில்லாமல் ஆணுறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல்வேறு விதமான வேடிக்கைப் பொருட்களையும் நமக்கு அளிக்கிறார்கள்... எல்லாம் காசுக்குத்தான், ஓசியில் அல்ல.

தாய்லாந்தில் உள்ள ஹோட்டல்களில் பில்லுடன் ஆணுறைகளை இலவசமாகவே தருகிறார்கள். இருப்பினும் இங்கிலாந்து ஹோட்டலில் இலவசமாக தருவதில்லை.

ஆணுறைகளைப் பயன்படுத்தி விதம் விதமான சிற்பங்கள், ஓவியங்களும் கூட இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவாம். அதாவது பாதுகாப்பான செக்ஸ் என்பதை நமக்கு நினைவூட்டும் வகையில் இப்படி ஆணுறைகளின் பின்னணியில் பலவிதமான பொருட்களை உருவாக்கி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்கின்றனர் இந்த ஹோட்டல்காரர்கள்.

English summary
After a nice meal out you might get the added bonus of a mint or a chocolate when your bill arrives at the end of the night. But when it comes to paying at a new restaurant in Oxford you might get a little more than you bargained for. That's because health conscious eatery Cabbages and Condoms is set to become the first in the UK to issue leaflets on protective sex when your meal ends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X