For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இத்தாலி' யிலிருந்து ஹெலிகாப்டர் கொள்முதல்- ஊழல் விசாரணை தொடர்கிறது: ஏ.கே. அந்தோணி

By Mathi
Google Oneindia Tamil News

AK Antony
டெல்லி: நாட்டின் விவிஐபிகளுக்காக 'இத்தாலி' நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து விவிஐபிக்களுக்காக ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்கப்படுகிறது. இந்த கொள்முதலில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அந்நாட்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தொடர்பான புகாரில் உண்மை இருந்தால் அந்நிறுவனத்துக்கான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.

English summary
India can cancel not just the VVIP chopper contract with AgustaWestland that is currently under investigation on corruption charges in Italy but also nullify all other contracts with the company and initiate recovery measures if the role of middlemen is proved, Defence Minister A K Antony informed Parliament in a detailed statement laid in the Lok Sabha on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X