For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழிலதிபர் நவீன் ஜின்டாலிடம் ரூ 100 கோடி கேட்டு மிரட்டியதாக ஜீ டிவி நிருபர்கள் கைது!

By Shankar
Google Oneindia Tamil News

Sudhir Chaudhary and Sameer_Ahluwalia
புதுடெல்லி: பிரபல தொழிலதிபரும், எம்.பி.யுமான நவீன் ஜின்டாலிடம் ரூ 100 கோடி கேட்டு மிரட்டியதாக ஜீ நியூஸ் தொலைக்காட்சி நிருபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலில் ஜின்டால் நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், இந்த உண்மையை தங்கள் தொலைக்காட்சி சேனலில ஒளிப்பரப்பாமல் இருக்க ரூ.100 கோடியை சமரச தொகையாக தர வேண்டும என்றும், ஜீ தொலைக்காட்சி சேனலின் தலைமை நிருபர்கள் 2 பேர் தன்னை மிரட்டுவதாகவும், அந்த புகார் மனுவில் ஜின்டால் கூறியிருந்தார்.

இதற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர் அளித்திருந்தார். இந்த வீடியோ பதிவுகள், என்டிடிவி உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாகின.

இந்த புகார் அளிக்கப்பட்ட 45 நாட்களுக்கு பிறகு, மேற்கண்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஜீ தொலைக்காட்சி சேனலின் தலைமை நிருபர்கள் சுதீர் சவுத்ரி, சமீர் அலுவாலியா ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.

ஜீ நிர்வாகம் மறுப்பு...

இதற்கிடைல் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்துள்ளது ஜீ. தங்கள் மீது வேண்டுமன்றே பழிபோடுவதாகக் கூறி ஜின்டால் மீது ரூ 150 கோடிக்கு மான நஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
Two senior journalists of Zee News have been arrested in Delhi in connection with a sting operation that was carried out by steel tycoon and Congress MP Naveen Jindal who accused the channel of extortion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X