For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துப்பாக்கியால் சுட்ட பாய் பிரண்ட்.. தோட்டாவைத் தடுத்து காப்பாற்றிய காதலியின் செயற்கை மார்பகம்!

Google Oneindia Tamil News

டோரண்டோ: கனடாவில் ஒரு பெண்ணை அவரது காதலர் துப்பாக்கியால் சுட்டு விட்டார். ஆனால் நல்ல வேளையாக அந்தப் பெண்ணின் செயற்கை மார்பகம், தோட்டாவைத் தடுத்து நிறுத்தி விட்டது. இதனால் அப்பெண்ணின் நெஞ்சை நோக்கி வந்த துப்பாக்கி தோட்டா, மார்போடு நின்று போக அவரும் உயிர் பிழைத்தார்.

இப்படிக் காதலியைச் சுட்ட காதலரின் பெயர் பெர்னாண்டோ சோரா. இவருக்கு 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' அல்ல, மாறாக 61 வயதாகிறது. இவரது முன்னாள் காதலிதான் எய்லீன் லைக்னெஸ். இவரும் வயதானவர்தான்.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. கோபத்தில் பெர்னாண்டோ தனது கைத் துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டார். குண்டு எய்லீன் மார்பை நோக்கிப் பாய்ந்தது. அய்யோ செத்தோம் என்று எய்லீன் பயந்து அலறினார். ஆனால் அவரது நெஞ்சுக்குள் குண்டு போகவில்லை. மாறாக அவரது மார்போடு நின்று போனது.

எய்லீன் செயற்கை மார்பகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தியிருந்தார். இதனால் குண்டு உடலுக்குள் போகாமல் செயற்கை மார்பகத்தோடு நின்று போனது. இதனால் அவர் உயிர் பிழைத்து விட்டார். இதுகுறித்து கோர்ட்டில் அவர் கூறுகையில்,அதிர்ஷ்டவசமாக நான் பொருத்தியிருந்த செயற்கை மார்பகம்தான் எனது உயிரைக் காத்தது என்றார் எய்லீன்.

எய்லீனின் வலது மார்பகத்தில் பாய்ந்த குண்டு, இடது மார்பகம் வழியாக வெளியேறி வந்து விட்டதாம். தோட்டா பாய்ந்ததால் அவரது செயற்கை மார்பகத்தின் சிலிக்கான் அனைத்தும் சேதமடைந்து விட்டதாம்.இருப்பினும் உயிர் மிஞ்சியதே என்று நிம்மதியாக உள்ளார் எய்லீன்.

தற்போது சோரா மீது கொலை முயற்சி வழக்குப் போட்டுவிசாரணை நடந்து வருகிறது.

English summary
A Canadian woman has her breast implants to thank for saving her life in a shooting. Eileen Likness, of Calgary, testified at the trial of her ex-boyfriend Wednesday that if it weren't for her surgically enhanced breasts, she would have been seriously hurt or even killed. 'My implants took the brunt of the force,' Likness said in court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X