For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்விட்சர்லாந்தில் விபச்சாரம் நடத்த 'ரூம்' கொடுக்கும் நகராட்சி

By Siva
Google Oneindia Tamil News

Prostitues
ஜுரிச்: ஸ்விட்சர்லாந்தில் விலைமாதுகளுக்காக அரசே சிறு சிறு அறைகளை அமைத்து தரவிருக்கிறது.

ஸ்விட்சார்லாந்து நாட்டின் பல்வேறு இடங்களில் விபச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜுரிச் நகரின் முக்கிய தொழிற் பகுதியில் விலைமாதுகள் பணியாற்றுவதற்காக நகர நிர்வாகமே சிறு, சிறு அறைகளை அமைத்து தரவிருக்கிறது. இந்த புதிய திட்டம் வரும் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி விலைமாதுகள் நகர நிர்வாகம் ஒதுக்கும் அறைகளை பயன்படுத்தி தொழில் செய்ய ரூ.2,274 கொடுத்து உரிமம் வாங்க வேண்டும். மேலும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலும் அவர்கள் சேர வேண்டும். இது தவிர ஒவ்வொரு இரவும் தொழில் செய்கையில் அவர்கள் 5 ஸ்விஸ் பிரான்கை அறைகள் இருக்கும் பகுதியில் வைக்கப்படும் டிக்கெட் மெஷினில் போட வேண்டும்.

இது குறித்து ஜுரிச் சமூதாய நலத்துறை அதிகாரி மைக்கேல் ஹெர்சிக் கூறுகையில்,

இதுவரை பொது இடங்களில் நடந்த விபச்சாரம் இனி தொழிற் பகுதியில் நடக்கப் போகிறது. இதன் மூலம் விபச்சாரம் செய்ய பல விதிமுறைகளை விதிக்க முடியும். பெண்களையும் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற முடியும். மேலும் விலைமாதுகளுக்கு இது ஒரு நல்ல வியாபாரம் என்றார்.

English summary
Prostitues in Zurich will be given set boxes by the city council to carry out their business. This new system will come into practice from next august.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X