For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வோட்காவில் இழந்த ‘கண்’ணை விஸ்கியில் மீட்ட ‘குக்’

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Whisky-Vodka
நியூசிலாந்து: அளவிற்கு அதிகமாக வோட்கா குடித்து கண்பார்வை இழந்த நபரை விஸ்கி குடிக்கவைத்து பார்வையை மீட்டுள்ளனர் மருத்துவர்கள். நியூசிலாந்தைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவருக்கு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

நியூசிலாந்தின் பிளைமவுத் வெஸ்டர்ன் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் சமையல் கலை ஆசிரியராக பணியாற்றுபவர் டெனிஸ் டுத்தே. நீரிழிவு நோயாளியான இவர், தன் பெற்றோரின் 50வது திருமண நாளையொட்டி மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்தில் ஏராளமாக வோட்காவை உள்ளே தள்ளியுள்ளார் டெனிஸ். அதே போதையோடு படுக்கையறைக்கு சென்ற போது அவரால் எதையுமே பார்க்க முடியவில்லை. இருட்டிவிட்டதாக நினைத்து தடவியபடியே சுவிட்சை போட்டும் வெளிச்சத்தை அவரால் காணமுடியவில்லை.

சரி கரண்டு இல்லை போல காலையில பார்த்துக்கலாம் என்று நினைத்து உறங்கிவிட்டார் டெனிஷ். மறுநாள் காலையில் போதை தெளிந்த பின்னரும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. அப்பொழுதுதான் டெனிஷ்க்கு உறைக்க ஆரம்பித்துள்ளது. தனக்கு கண் தெரியாத விவரத்தை குடும்பத்தினரிடம் மெதுவாக கூறியுள்ளார்.

இதனையடுத்து தரனாகி பேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அளவிற்கு அதிகமாக குடித்த வோட்கா நீரிழிவு நோய்க்காக டெனிஷ் சாப்பிட்டு வரும் மாத்திரையுடன் கலந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டதால் பார்வை பறிபோய்விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மெத்னால் என்ற மூலப் பொருளினால் ஏற்பட்ட இந்த எதிர்வினையை, எத்தனால் என்ற மூலப்பொருளின் மூலம் சரி செய்துவிட முடியும் என நம்பிய மருத்துவர்கள், டெனிஸ் டுத்தேயின் வயிற்றில் அறுவைசிகிச்சை மூலம் எத்தனாலை செலுத்த முடிவு செய்தனர்.

ஆனால் அந்த மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு தேவையான அளவு எத்னால் அருகில் இருந்த மதுக்கடையில் இருந்து ஒரு பாட்டில் விஸ்கியை வாங்கி, ஒரு டியூபின் மூலம் டெனிஷ் வயிற்றுக்குள் செலுத்தினார்கள். இந்த சிகிச்சை முடிந்த பின் 5 நாட்கள் வரை சுயநினைவின்றி இருந்த டெனிஸ் டுத்தே 6ஆம் நாள் கண்விழித்த போது, பார்வையில் கோளாறு ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் அவரால் தெளிவாக பார்க்க முடிந்தது.

வோட்காவால் கண்பார்வை இழந்தவர் விஸ்கியால் அதை திரும்ப பெற்றார். இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வெளிநாட்டு சரக்காக இருந்ததால் பார்வை போய் மீண்டும் வந்து விட்டது. இதே நம் ஊர் டாஸ்மாக் சரக்காக இருந்தால் உயிரே போயிருக்கும் என்கின்றனர் சில அனுபவசாலிகள்.

English summary
A bottle of whisky saved the sight of a 65-year-old man in New Zealand who was blinded after the vodka he was drinking reacted with his diabetes medication. Denis Duthie, a catering tutor at New Plymouth's Western Institute of Technology, had decided to have a few drinks to celebrate his parents' 50th wedding anniversary
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X