For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபேஸ்புக்கில் தாக்கரே பற்றி கமெண்ட் போட்ட பெண் குடும்பத்தோடு குஜராத்தில தஞ்சம்!

By Siva
Google Oneindia Tamil News

Shaheen
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடந்த அன்று மும்பையில் நடந்த பந்த் பற்றி ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டு கைதான ஷாஹீன் தனது குடும்பத்தாருடன் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறி குஜராத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடந்த அன்று மும்பையில் பந்த் நடந்தது. இது குறித்து மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பால்கரைச் சேர்ந்த ஷாஹீன் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டிருந்தார். அதற்கு ரேணு சீனிவாசன் என்ற பெண் லைக் கொடுத்திருந்தார். இதையடுத்து மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த 2 பெண்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே பால்கரில் உள்ள ஷாஹீனின் உறவினரின் கிளினிக்கை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து இனி ஃபேஸ்புக் பக்கமே போக மாட்டேன் என்று ஷாஹீன் தெரிவித்திருந்தார். இருப்பினும் சிவசேனா தொண்டர்களால் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்று பயந்த ஷாஹீன் தனது குடும்பத்தாரோடு மகராஷ்டிராவில் இருந்து வெளியேறி குஜராத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

ஷாஹீனையும், ரேணுவையும் அவசர அவசரமாக கைது செய்த 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் அந்த பெண்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி ராமச்சந்திரா பகதேவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

English summary
Shaheen, the girl from Palghar in Thane district of Maharashtra who was arrested for a facebook post on the bandh-like situation in Mumbai following the death of Shiv Sena Chief Bal Thackeray, has fled the state along with her family. She has now taken shelter in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X