For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின

By Siva
Google Oneindia Tamil News

அலாஸ்கா: அமெரிக்காவின் ஆன்கரேஜ் மற்றும் அலாஸ்கா கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.

அமெரிக்காவின் ஆன்கரேஜ் மற்றும் அலாஸ்கா கடற்கரை பகுதியில் நேற்று மாலை 4.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8க பதிவாகியிருந்தது. ஆன்கரேஜில் இருந்து வடமேற்கே 25 கிமீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகள் குலுங்கின. அலமாரிகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதைப் பார்த்து பயந்துபோன மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் வந்து நின்றனர். பின்னர் அதிர்வுகள் அடங்கிய பிறகு வீடுகளுக்குள் சென்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

English summary
Earth quake measuring 5.8 hit Anchorage and Alaska on monday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X