For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவின் 'எப்.டி.ஐ. நாடகம்': நாடாளுமன்றத்தில் அதிமுக கடும் தாக்கு

By Chakra
Google Oneindia Tamil News

MP Thambidurai
டெல்லி: நாடாளுமன்றத்தி்ல் உள்ள பெரும்பாலான கட்சிகள் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கின்றன. இதனால் இங்கே சிறுபான்மையாக உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசினார்.

மக்களவையில் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிராக மாலை நடக்கவுள்ள ஓட்டெடுப்பையொட்டி இன்று நடந்த விவாதத்தின் போது பேசிய அவர்,

2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அன்னிய முதலீடு பற்றி வாக்குறுதி அளித்த பாஜக கூட்டணி தோல்வியடைந்துள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்தத் திட்டத்தை இந்த அரசு கொண்டு வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது அன்னிய முதலீட்டை எதிர்த்த காங்கிரஸ் இப்போது ஆதரிப்பது ஏன்?.

அவையில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அன்னிய முதலீட்டை எதிர்க்கின்றன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே ஆதரிக்கின்றன. சிறுபான்மையாக உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசுகளை வற்புறுத்தி வருகிறது. அன்னியச் செலாவணியைப் பெற எத்தனையோ நல்ல வழிகள் இருக்கும் போது, நாட்டைக் கூறுபோடும் இந்தத் திட்டம் தேவையற்றது.

2ஜி ஊழலில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசை அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே எப்டிஐயைக் கொண்டு வந்துள்ளது. அன்னிய நெருக்கடி காரணமாகவே எப்டிஐயை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு காந்தி நாட்டை அன்னியர்களிடமிருந்து காப்பாற்றினார். ஆனால், இப்போது இன்னொரு காந்தி (சோனியா-ராகுல் காந்தி) நாட்டை அன்னியர்களிடம் அடமானம் வைக்கிறார்.

அன்னிய முதலீட்டை தமிழகத்தில் எதிர்க்கும் திமுக, இங்கே மட்டும் ஆதரிப்பது ஏன். தமிழ்நாடு என்ன இலங்கையிலா இருக்கிறது என்றார் தம்பிதுரை.

எப்டிஐ நாட்டைப் பிளவுபடுத்தும்-சரத் யாதவ்:

அதே போல ஐக்கிய ஜனதா கட்சித் தலைவர் சரத் யாதவ் பேசுகையில், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டத்தைக் கொண்டு வந்தால், அது நாட்டையே பிளவுபடுத்திவிடும்.

இந்த அரசுக்கு நாட்டைப் பற்றி சிறிதும் கவலையில்லை. இந்தத் திட்டத்தால் நாட்டுக்கு எந்த வகையிலும் லாபம் இல்லை. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும், மத்திய அரசை யாரும் ஆதரிக்கக் கூடாது. சந்தையைக் காப்பற்ற நினைத்து, மத்திய அரசு நாட்டையே அந்தரத்தில் விட்டுவிட்டது என்றார்.

English summary
Expressing his parties opposition to FDI in retail, AIADMK MP Thambidurai said that the government was under presure to bring FDI which would have a harmful impact on the Indian economy and local traders. Taking a dig at Sonia and Rahul Gandhi, he said, “One Gandhi tried to save the country by opposing foreign products, other doing the opposite.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X