For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'உலக மகா சக்தி' ஒபாமா... மன்மோகன்சிங் 19 வது இடம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

உலக அளவில் சக்தி வாய்ந்த மனிதர்களாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதலிடம் பெற்றுள்ளார். 71 பேர் அடங்கிய இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா 12 வது இடத்தையும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 19 இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய நபர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

முதலிடம் ஒபாமாவுக்கே

முதலிடம் ஒபாமாவுக்கே

51 வயதான அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் முதலிடம் பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் அவருக்கு எதிரான கருத்துக்கணிப்பை தவிடுபொடியாக்கி வெற்றி பெற்றதே அதற்குக் காரணமாக கருதப்படுகிறது.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்

58 வயதான ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஜெர்மன் நாட்டின் முதல் பெண் பிரதமரான இவர் இரும்புப் பெண் என்று புகழப்படுகிறார். கடந்த ஆண்டு 4 வது இடத்தில் இருந்த இவர் இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ரஷ்யாவின் விளாடிமிர் புடின்

ரஷ்யாவின் விளாடிமிர் புடின்

60 வயதான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த பட்டியலில் 3 வது இடம் பிடித்துள்ளார். ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்சினுக்கு பிறகு கடந்த, 2000-ம் ஆண்டில் ரஷ்ய அதிபரானார் விளாடிமிர் புடின். 2008ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். இப்போது 3 வது முறையாக அதிபராக பதவிக்கு வந்ததை அடுத்து ஃபோர்ப்ஸ் இதழில் 3வது இடம் பிடித்துள்ளார்.

மைக்ரோ சாப்ட் பில் கேட்ஸ்

மைக்ரோ சாப்ட் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்க்கு 4 வது இடம் கிடைத்துள்ளது. 57 வயதான பில் கேட்ஸின் சாதனைக்காகவே இந்த கவுரவம் கிடைத்துள்ளது.

போப் 16ம் பெனிடிக்ட்

போப் 16ம் பெனிடிக்ட்

கத்தோலிக்க மதத்தலைவர் 16ம் போப் பெனிடிக்ட் இந்த பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளார். 15ம் போப் பெனிடிக்ட் மறைந்த உடன் 2005ம் ஆண்டு இவர் போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 85 வயதிலும் இவரது சேவை மகத்தானதாக போற்றப்படுகிறது. இதனாலேயே சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

வர்த்தகர்களின் ஆதிக்கம்

வர்த்தகர்களின் ஆதிக்கம்

மக்களிடையேயான ஆதிக்கம், சொத்துமதிப்பு, நிதி ஆளுமை, தமது பரந்துபட்ட அதிகார விஸ்தாரம், பதவியில் தற்போது நிலைத்திருத்தல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு தரப்படுத்தப்பட்டுள்ள இப்பட்டியலில், அரசியல் தலைவர்களை தவிர்த்து வர்த்தகர்கள் என்ற ரீதியில் பார்த்தால் இப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். அமெரிக்க ஃபெடரல் சேர்மென் பென் பெர்னாக், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ ட்ராகி ஆகியோரும் முதல் பத்துக்குள் வந்துள்ளனர்.

சீன அதிபர் சி ஜின் பிங்

சீன அதிபர் சி ஜின் பிங்

சீனாவின் புதிய அதிபர் சி ஜின் பிங் இப்பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த முறை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்த சீன அதிபர் ஜூ ஜிண்டாவோ இம்முறை பட்டியலிலிருந்து வெளியேறியுள்ளார். காரணம் அவர் பதவி விலகுவதுடன், புதிய அதிபராக சி ஜின்பிங் தேர்வு செய்யப்படுவதுதான்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்

46 வயதான டேவிட் கேமரூன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக இருந்தவர், கடந்த 2010ம் ஆண்டுமுதல் இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருகிறார். இங்கிலாந்து நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். உலக நாடுகள் பலவற்றுடன் நட்புறவு பாராட்டி வருவதற்காகவே சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் 10 இடம் கிடைத்துள்ளது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இந்தப் பட்டியலில் 12 வது இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் ஆளும் கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சியின் தலைவியாக நீண்டகாலம் பதவி வகித்து வருகிறார். சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் கடந்த 2004ம் ஆண்டு 3 வது இடமும், கடந்த 2007ம் ஆண்டு 6 வது இடமும் இவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. டைம் இதழும் இவரை 2007, 2008ம் ஆண்டுகளில் உலகில் செல்வாக்கு மிக்க 100 பேரில் ஒருவராக அறிவித்திருந்தது.

கோடீஸ்வரர் வாரன் பப்பெட்

கோடீஸ்வரர் வாரன் பப்பெட்

81 வயதான வாரன் பப்பெட் அமெரிக்க கோடீஸ்வரர்களில் குறிப்பிடத்தக்கவர். பெர்க்ஷயர் ஹாத்அவே நிறுவனத்தின் தலைவரான இவருக்கு ரூ.21/4 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் இவருக்கு 15 வதும் கிடைத்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்

பிரதமர் மன்மோகன் சிங்

80 வயதான இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இந்தப்பட்டியலில் 19 வது இடம் பெற்றுள்ளார். இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை பெற்றவர் இவர். சிறந்த பொருளாதார நிபுணர் என்பதோடு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் 8 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்பதாலேயே இந்த பட்டியலில் 19 வது இடம் கிடைத்துள்ளது.

ஃபேஸ்புக் மார்க் சூக்கர்

ஃபேஸ்புக் மார்க் சூக்கர்

28 வயதான பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர் பேர்க் இப்பட்டியலில் 25 வது இடத்தையும், 81 வயதான நியூஸ் கோர்ப் நிறுவனர் ரூபர்ட் முர்டோச் 26 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பட்டியலில் இருந்து வெளியேறியவர்கள்

பட்டியலில் இருந்து வெளியேறியவர்கள்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் முதலாவது ஜனாதிபதிக்காலத்தில் பதவி வகித்த திமோதி கெய்ட்னர், ஹிலாரி கிளிண்டன் ஆகியோரும் இப்பட்டியலிலிருந்து நீக்கம் பெற்றுள்ளனர். அவர்களும் ஒபாமாவின் இரண்டாவது அதிபர் ஆட்சிக்காலத்தில் தமது பதவிகளை மறுத்தமையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

English summary
When it comes to power, politics trumps business, according to a new Forbes ranking on Wednesday that found heads of state occupying six of the top 10 spots among the world’s most powerful people, led by President Barack Obama. The annual list selected what Forbes said were the world’s 71 most-powerful people from among the roughly 7.1 billion global populace, based on factors ranging from wealth to global influence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X