For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்ஸின் போப்பா சூறாவளி - பலி எண்ணிக்கை 500 ஐ தாண்டியது

By Mathi
Google Oneindia Tamil News

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப் போட்ட "போப்பா" சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. இன்னமும் 400 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்ட்னாவோ தீவுகளைப் பகுதியை சில நாட்களுக்கு முன்பு போப்பா சூறாவளி தாக்கியது. மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். 540 பேர் பலியாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மொத்தம் 506 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டிருக்கின்றனர். மேலும் 400 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

இந்த சூறாவளி புயலால் சுமார் 3 லட்சம் பேர் வீடிழந்து முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இடிபாடுகளில் சிக்கியிருப்போரை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
At least 540 people have been confirmed dead in the Philippines following the deadliest typhoon to hit the country this year, rescue officials said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X