For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவுத் தூண் உடைப்பு

By Shankar
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனுக்கு அமைக்கப்பட்ட நினைவுத் தூணை சிங்களர்கள் உடைத்தெறிந்தனர்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் அடையாள சின்னங்களை சிங்களர்கள் திட்டமிட்டு அழித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் வாழ்விடங்களில் இலங்கை ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து புத்த ஆலயங்களை கட்டி வருகிறார்கள்.

இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனுக்கு நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருந்தது. இந்திய அரசுக்கு எதிராக 5 அம்ச கோரிக்கையை முன் வைத்து அவர் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நினைவுத் தூண் பகுதி ஒரு ஆலயத்தைப் போல உருவாக்கப்பட்டிருந்தது. அந்த நினைவுத் தூணை சமீபத்தில் ஈழத் தமிழர்கள் வழிபட்டனர். இதைக் கண்டதும் சிங்கள ராணுவத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர். இரு தினங்களுக்கு முன்பு இந்த நினைவுத் தூணை சிங்களர்கள் உடைத்து தகர்த்தனர்.

தமிழர்களின் அடையாளம் எதுவும் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு சிங்களர்கள் இந்த அநாகரீக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் ஈழத் தமிழர்களின் முதுகில் குத்தி துரோகம் செய்த கருணா, டக்ளஸ், கே.பி. போன்றவர்கள் இதுபற்றி வாய் திறக்காமல் சிங்களர்களை ஆதரித்து வருகின்றனர்.

English summary
Sinhalese have demolished the memomorial of Thileepan who dead during his fast against Indian Army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X