For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீடிக்கும் வஞ்சகம்.. மத்திய அரசின் கீழ் ஏன் நீடிக்க வேண்டும் தமிழகம்?: வைகோ

By Mathi
Google Oneindia Tamil News

Vaiko
திருச்சி: தமிழக உரிமை விவகாரங்களில் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு கீழே தமிழகம் ஏன் இருக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் நேற்று 'நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:

சூடானால் நைல் நதியில் பிற நாடுகளின் மீதான உரிமைகளை மறுக்க முடியவில்லை. ஐரோப்பிய நாடுகள் தனுபே நதிநீர் விவகாரத்தில் சுமூகமாகவே தீர்வு காண்கின்றன. ஆனால் இந்திய மாநிலங்கள்தான் மற்ற மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்றன.

நதிநீர் விவகாரங்களில் மத்திய அரசு தொடர்ந்தும் வஞ்சகப் போக்கை கடைபிடித்தால் இந்த மத்திய அரசின் கிழி ஏன் தமிழ்நாடு இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழும்.. அதுமட்டுமல்ல.. இந்தியாவின் 100-வது விடுதலை நாள் விழாவில் இந்தியா ஒன்றுபட்ட ஒரு நாடாக இருக்காது என்றே எச்சரிக்கிறேன்.

தமிழகத்துக்கு காவிரி நீரைத் தராக கர்நாடகாவுக்கு நாம் ஏன் நெய்வேலி மின்சாரத்தை தர வேண்டும்? தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்டியாக வேண்டும் என்றார் அவர்.

English summary
If Centre's policy agains Tamilnadu continue it will jeopardise Indian unity. When the 100th anniversary of the Independence Day will be celebrated on 2047, Tamil Nadu would not be a part of India,” thundered Vaiko while addressing a meeting held late on Friday night in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X