For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக ஆட்சிக்கு வந்தால் எப்.டி.ஐ. ரத்து செய்யப்படும்: முரளி மனோகர் ஜோஷி

By Mathi
Google Oneindia Tamil News

Murli Manohar Joshi
போபால்: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய முரளி மனோகர் ஜோஷி, இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கான லாபிக்காக 5.3 கோடி டாலரை வால்மார்ட் நிறுவனம் வாரி இறைத்திருக்கிறது. ஐந்து முக்கிய நாடுகளில் இந்த அன்னிய முதலீட்டுக்கான அனுமதி என்பது தோல்வி அடைந்த ஒன்றாகிப் போய்விட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. லோக்சபாவிலும் ராஜ்யசபாவில் எப்.டி.ஐ. மீதான விவாதத்தின் போது பெரும்பாலான எம்.பிக்கள், எங்களது குரலிலேயே பேசினர். ஆனால் அவர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை என்றார் அவர்.

English summary
Senior BJP leader Murli Manohar Joshi has said that Foreign Direct Investment (FDI) in retail would be scrapped if NDA was voted to power in 2014 general elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X