For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் நீர் திறப்பு நிறுத்தம்- வானகப் போக்குவரத்து தொடங்கியது!

By Mathi
Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதை கர்நாடகா நிறுத்தியதால் இரு மாநில வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த புதன்கிழமையன்று காவிரியில் நீரை திறந்துவிட்டது கர்நாடகா. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மண்டியா மற்றும் மைசூர் மாவட்டங்களில் கடும் போராட்டம் நடைபெற்றது.

இதனால் ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள், லாரிகள் பண்ணாரி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன. மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைப்பகுதி வழியான போக்குவரத்தும் ஊட்டி வழியான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 5 நாட்களாக இரு மாநிலங்களிடையேயான வானகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காவிரியில் நீர் திறப்பதை நிறுத்திவிட்டதாக கர்நாடகா முதல்வர் அறிவித்ததையடுத்து போராட்டங்களும் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முதல் சரக்கு லாரிகள் கர்நாடகாவுக்குப் புறப்பட்டு சென்றன. இன்று காலை முதல் பேருந்துகளும் லாரிகளும் வழக்கம் போல இயங்கி வருகின்றன

English summary
Vehicular traffic to Karnataka, which was stopped for the last five days following protests in parts of the neighbouring state over the government's decision to release Cauvery water to Tamil Nadu, resumed on Tuesday, police said. Tamil Nadu police allowed plying of vehicles to Karnataka from late last night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X