For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் வக்கீல் மீது கேஸ் போட்ட சென்னை உயர் நீதிமன்ற ஜட்ஜ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சித்ரா சம்பத் மீது நீதிபதி வினோத் கே. சர்மா அவதூறு வழக்கு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிபதி வினோத் கே.சர்மா முன்பு மூத்த பெண் வழக்கறிஞரான சித்ரா சம்பத் ஒரு வழக்கில் ஆஜரானார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர். இதையடுத்து சித்ரா சம்பத் மீது, நீதிபதியே கோர்ட் அவமதிப்பு வழக்கைத் தொடுத்தார்.

நீதிபதியின் இந்த செயலால் பரபரப்புஏற்பட்டுள்ளது. வக்கீல்கள் கோபமடைந்து, இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில குதித்தனர்.

வக்கீல் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கை நீதிபதி கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Madras HC Judge Vinoth K Sharma has slapped contempt of court case against woman lawyer Chitra Sampath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X