For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பில் 'மைனாரிட்டி'யாகி வரும் சிங்களர்கள்.. பெருகி வரும் தமிழர்கள், முஸ்லீம்கள்

Google Oneindia Tamil News

Colombo
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பில் சிங்களர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாம். அதேசமயம், தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறதாம்.

இலங்கையில் நீண்ட காலத்திற்குப் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தலைநகர் கொழும்பில் யார் அதிகம் உள்ளனர் என்ற தகவல் சிங்களர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவர்கள் கொழும்பில் மைனாரிட்டியாக உள்ளதாக கூறப்பட்டிருப்பதே.

அதாவது கொழும்பில் உள்ள சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் 24 சதவீதம்தான். மற்றவர்கள் அனைவரும் தமிழர்கள், முஸ்லீம்கள், பிற சமுதாயத்தினர் ஆவர்.

முஸ்லீம்கள்தான் 2வது பெரிய இனக்குழுவாக கொழும்பில் உள்ளனர். அவர்களது எண்ணிக்கை 40 சதவீதமாகும். 3வது பெரிய குழுவாக தமிழர்கள் உள்ளனர். இவர்களது எண்ணிக்கை 33 சதவீதமாகும்.

கடந்த 1971ம் ஆண்டு கணக்குப்படி கொழும்பில் சிங்களர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருந்தது. 2001 கணக்குப்படி இது 41 சதவீதமாக இருந்தது. தற்போது அடியோடு குறைந்து போய் விட்டது.

கொழும்பில் தற்போது 79,468 சிங்களர்களும், 1,26,345 முஸ்லீம்களும், 1,06,325 தமிழர்களும் உள்ளனர்.

English summary
According to a poulation study, Sinhalese have become minority in Colombo, capital city of Sri Lanka. Tamils and Muslims are dominating the Sinhalese capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X