For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் கூடுதலாக 8 மணல் குவாரிகள் திறப்பு: ஒரு லாரி மணல் விலை ரூ.20,000 குறைந்தது

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 8 மணல் குவாரிகள் திறந்ததால் விஷமாய் ஏறிய மண்ணின் விலை குறைந்துள்ளது. தற்போது 1 லாரி மணல் ரூ.15,000 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த பல மணல் குவாரிகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடும் மணல் தட்டுப்பாடு நிலவியது. மணல் விலை விஷம் போல் ஏறியது. மேலும் போதிய மணல் கிடைக்காமல் கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் மூடப்பட்ட பல மணல் குவாரிகள் திறக்கப்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மூடப்பட்டிருந்த மணல் குவாரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு, படாளம், மாலந்தூர். சீத்தஞ்சேரி, திருக்கழுக்குன்றம், பாலாறு உள்பட 8 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் முன்பு விழுப்புரத்திற்கு சென்று மணல் அள்ளியவர்கள் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள குவாரிகளுக்கு சென்று மணல் அள்ளுகின்றனர்.

குவாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஒரு லாரி மணலின் விலை ரூ.15,000க குறைந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜா கூறுகையில்,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 7 யூனிட் மணல் பெரிய லாரியில் 1 லோடுக்கு ரூ. 60,000 வரை விலை உயர்ந்தது. ஆனால் தற்போது விலை குறைந்து ரூ.40,000க்கு விற்கப்படுகிறது.

4 யூனிட் மணல் சிறிய லாரியில் ஒரு லோடுக்கு ரூ.25,000 வரை விலை உயர்ந்தது. ஆனால் தற்போது ரூ.15,000க்கு கிடைக்கிறது. அரசே மணல் வழங்க வேண்டும் என்று தான் போராடி வருகிறோம். 1 யூனிட் மணலுக்கு அரசு ரூ.312 விலை நிர்ணயிக்கிறது. ஆனால் அந்த மணலை வெளியே கொட்டி வைத்து ஒரு யூனிட் ரூ.2,500க்கு விற்பனை செய்கிறார்கள். இதை குறைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தி வருகிறோம்.

சென்னை மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அரசே நேரடியாக மணல் வழங்கினால் அதன் விலை மேலும் குறையும் என்றார்.

English summary
Sand prices have gone down after 8 additional quarries are opened in Tamil Nadu. But sand lorry owners expect state government to sell sand directly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X