For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேட் மிடில்டனை கவனித்த இந்திய நர்ஸ் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடித்தத்தில் என்ன உள்ளது?

By Siva
Google Oneindia Tamil News

Jacintha saldanha
லண்டன்: இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் சிகிச்சை பெற்ற கிங் எட்வர்ட் மருத்துவமனையில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி நர்ஸ் ஜெசிந்தா சல்டானா தற்கொலை செய்யும் முன்பு தனது குடும்பத்தாருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

கர்ப்பமாக உள்ள இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார். அப்போது அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி நர்ஸ் ஜெசிந்தா சால்டானா(46) ரிஷப்ஷனில் இருந்தார். அப்போது 2 பேர் போன் செய்து தாங்கள் இங்கிலந்து ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் என்று கூறி கேட்டுக்கு அளிக்கும் சிகிச்சை பற்றி கேட்டனர்.

அவர்கள் நிஜமாகவே ராஜ குடும்பத்தினர் என்று நினைத்த ஜெசிந்தா போனை கேட்டுக்கு சிகி்ச்சை அளித்த நர்ஸிடம் கொடுத்தார். அவரும் சிகிச்சை விவரங்களை அவர்களிடம் தெரிவித்தார். ஆனால் போனில் பேசியவர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேடியோ ஜாக்கிகள். இதனையடுத்து போனில் போலியாக பேசிய ஆஸ்திரேலிய எப்.எம். ஜாக்கிகள் மெல் கிரீக் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகிய இருவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையே 2 குழந்தைகளுக்கு தாயான ஜெசிந்தா கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது குடும்பபத்தாருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் என்ன எழுதியிருந்தார் என்பதை அவரது கணவர் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை. ஆனால் அந்த கடிதத்தின் மூலம் தான் அவர் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன என்று தெரிய வரும்.

இந்நிலையில் ஜெசிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வந்தது. அதில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

English summary
Jacintha Saldanha, the Indian nurse who worked at King Edward VII hospital ended her life after the hoax call about Kate Middleton. Her post martem report is coming today. She left a note her family and it was found yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X