For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட எண்ணெய் கிடங்குகளைப் பறிக்கிறது இலங்கை!

By Mathi
Google Oneindia Tamil News

 Sri Lankan government
கொழும்பு: திருகோணமலை துறைமுகத்தில் இருக்கும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து பிரம்மாண்ட எண்ணெய் கிடங்குகளை மத்திய அரசு நிறுவனமான ஐ.ஓ.சிக்கு குத்தகையாக கொடுத்ததை பறிக்க இலங்கை முடிவு செய்திருக்கிறது.

முதலாம் உலகப் போர் காலத்தில் இங்கிலாந்து கடற்படை கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிக்க திருகோணமலையில் பிரம்மாண்டமான கிடங்குகள் அமைக்கப்பட்டன. இதில் 99 எண்ணெய் கிடங்குகளை 2002-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு இந்தியாவுக்கு நீண்டகால குத்தகைக்குக் கொடுத்தது. இந்த கிடங்குகளில் சுமார் 12,100 மெட்ரிக் டன் எண்ணெய் சேகரிக்க முடியும். மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இருக்கக் கூடிய மிகப் பெரிய எண்ணெய் கிடங்கு இது.

இதனால் திருகோணமலை துறைமுகம் இந்தியாவின் வசம் இருந்து வந்தது. திருகோணமலை துறைமுகம் யார் வசம் இருக்கிறதோ அவர்கள்தான் தென்னாசிய அரசியலைத் தீர்மானிப்பவர்கள் என்ற சொல் ஆயிரமாண்டுகாலமாக இருந்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு இது சாதகமாக இருந்து வருகிறது,

இந்த நிலையில் தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமோ, ரணில் அரசாங்கம் சட்டப்பூர்வமாக இந்தியாவுக்கு இந்த கிடங்குகளைக் கொடுக்கவில்லை என்று கூறி இவற்றைப் பறிக்க முடிவு செய்திருக்கிறது.

English summary
The Sri Lankan government has decided to take over a petroleum storage tank complex in Eastern Sri Lanka that was given to an Indian oil company on a long lease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X